தமிழ்நாடு

tamil nadu

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முதல் கட்சியாக வேட்பாளர்களை அறிவித்த நாம் தமிழர்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 27, 2024, 4:30 PM IST

Updated : Jan 27, 2024, 4:40 PM IST

Naam Tamilar Katchi: நாம் தமிழர் கட்சிக்குத் திருநெல்வேலி, தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Naam Tamilar Katchi announced parliament constituency candidate for tirunelveli and tenkasi
நாடாளுமன்ற தேர்தலுக்கு முதல் கட்சியாக வேட்பாளர்களை அறிவித்த நாம் தமிழர் கட்சி

திருநெல்வேலி:நாம் தமிழர் கட்சியின் திருநெல்வேலி, தென்காசி மாவட்ட 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

பாளையங்கோட்டை எல்.எஸ்.மகாலில் வைத்து வைத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருநெல்வேலி மற்றும் தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி இன்றி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்கு பா.சத்யா, தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்கு மயிலை ராஜன் ஆகிய இருவரையும் நாம் தமிழர் கட்சி வேட்பாளாராக சீமான் அறிவித்துள்ளார். திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பா.சத்தியா, நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஆவார். இவர் திருநெல்வேலியில் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டு 49 ஆயிரத்து 898 வாக்குகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி 5 வருடம் ஆகிவிட்டது.. மதுரை எய்ம்ஸ் எங்கே? சு.வெங்கடேசன் எம்.பி!

Last Updated : Jan 27, 2024, 4:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details