ETV Bharat / state

மனைவியை 17 இடங்களில் குத்திய கணவர்.. திருப்பத்தூரில் பரபரப்பு! - Husband attack wife - HUSBAND ATTACK WIFE

Husband Attack Wife: திருப்பத்தூரில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை கத்தியால் குத்திய கணவரிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவன், மனைவி புகைப்படம்
கணவர் மனைவி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 29, 2024, 7:31 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலப்பட்டு அடுத்த கல்லு குட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (30). இவர் சென்னையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு வெங்கடேஸ்வரா நகர்ப் பகுதியைச் சேர்ந்த நந்தினி (28) என்பவரை திருமணம் செய்துள்ளார்.

மேலும், இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் ஏதும் இல்லாத நிலையில், இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கணவரிடமிருந்து பிரிந்து நந்தினி தனது அம்மா வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். மேலும், நந்தினி புதுப்பேட்டை ரோடு பகுதியில் உள்ள தனியார் பைனான்ஸில் பணியாற்றி வந்துள்ளார்.

இதற்கிடையில், பிரவீன் தனது மனைவியை பலமுறை அழைத்தும் அவர் வராத காரணத்தினால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை தனியார் பைனான்ஸுக்குச் சென்ற பிரவீன், நந்தினியை தனியாக அழைத்து, தன்னுடன் வீட்டுக்கு வர அழைத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது நந்தினி வர மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரவீன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நந்தினியை சரமாரியாக 17 இடங்களில் குத்தியுள்ளார். அப்போது நந்தினியின் அலறல் சத்தம் கேட்டு உடனடியாக வந்த அக்கம்பக்கத்தினர், நந்தினியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நந்தினியை கத்தியால் குத்தியதில், பிரவீனுக்கும் கையில் காயம் ஏற்பட்டது.

பின்னர், அங்கேயே அவர் அமர்ந்திருந்த நிலையில், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருப்பத்தூர் நகரப் போலீசார், பிரவீனை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று முதலுதவி அளித்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : கொடைக்கானலில் மான் வேட்டையாடி சமைத்த கும்பல் கைது! - KODAIKANAL DEER HUNTING

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.