ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் மே 27ஆம் தேதி மாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மார்க்சிய மெய்யறிவு கல்வி நிலையம் கொண்ட நூலகத்துடன் புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா நடைபெற உள்ளதாகவும், இதில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைப்பதாகவும் தெரிவித்தார். திறப்பு விழா சம்மந்தமாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், "மதச்சார்பின்மை என்ற கொள்கைக்கு கேடு விளைவிக்கக் கூடிய பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டுள்ளது.
சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் பேசும் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu) அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையம் நீதிமன்றங்கள், சிபிஐ உட்பட வருமான வரித்துறை அமலாக்கத்துறையில் சுதந்திரமாக செயல்பட முடியாத நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. பிரதமர் மோடி நாட்டினுடைய பிரதமர், நாட்டு மக்களுக்கு என்னென்ன சாதனைகளை செய்தேன் என்று பட்டியலிட்டு சொல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது.
அதனை செய்யாமல் வட மாநிலம் தென் மாநிலம் என்று பிரிவினை வாதம் பேசுகிறார், வடக்கு, தெற்கு என்று பேசிப் பார்த்தார். எந்த வகையிலும் பயன் கிடைக்காத நிலையில் கடைசியாக நான் ஒரு கடவுளின் அவதாரம் என்று தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு இருக்கின்ற நம்பிக்கையை தவறான முறையில் கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும், ஜாதியின் பெயராலும் மக்களிடத்தில் ஒரு வெறியை உருவாக்கி அதன் மூலமாக குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முயற்சி மேற்கொள்கிறார்.
இட ஒதுக்கீடு காரணமாகத்தான் விபி சிங் ஆட்சியை பாஜக கவிழ்த்தது. மண்டல குழு பரிந்துரை அமல்படுத்துவேன் என்றும் வி பி சிங் கூறியதாலேயே அந்த அரசாங்கத்தை கவிழ்த்த கூட்டம் தான் பாஜக. மோடி அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு புறம்பாக பிரச்சாரம் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று புகார் கொடுத்தார்கள்.
அந்த புகார்களுக்கு எந்த பதிலும் அளிக்காத தேர்தல் ஆணையம் தேசிய தலைவர் பாஜக நட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்புகிறது. யார் மீது புகாரோ அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக பல் இழந்த பாம்பாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இது நாட்டிற்கு ஆபத்தானது, தேர்தல் ஆணையம் சுதந்திரமாகவும், தனித்தன்மையோடும் செயல்பட வேண்டும்.
எவருடைய கட்டுப்பாட்டிற்கும் உட்பட்ட அமைப்பாக தேர்தல் ஆணையம் செயல்படக்கூடாது. ஆனால் இன்று முழுக்க முழுக்க மோடியின் கட்டுப்பாட்டிற்கு தேர்தல் ஆணையம் சென்றுவிட்டது என்பது மிகுந்த கவலைக்குரியது. வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த உடனே எத்தனை சதவீதம் வாக்குப்பதிவுகள் நடைபெற்றது என்பது அறிவிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது.
வாக்குகள் எண்ணும்போது எத்தனை தில்லுமுல்லுகள் நடைபெறும் என்பதை நினைத்தாலே அச்சமாக உள்ளது. பாஜகவினர் எந்த பலிபாவத்தையும் செய்யக் கூடியவர்கள் தான். அமித்ஷா, மோடி கூட்டணி எதை வேண்டுமானாலும் செய்வார்கள். எதைச் செய்தாவது அதிகாரத்தை கைப்பற்றிட வேண்டும் என்று அரசியல் வெறி, பதவி வெறி பிடித்து கூட்டமாக இருக்கிறார்கள்.
ஏற்கனவே வெற்றி பெற்ற சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கினார்கள். இப்போது பொதுத் தேர்தலில் வேட்பாளர்களையே விலை கொடுத்து வாங்குகின்றனர். இனியாவது தேர்தல் ஆணையம் நாட்டு மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கை போய்த்து போகாமல் நம்பகத் தன்மையை காப்பாற்ற வேண்டும். கேரளா அரசாங்கம் சிலந்தியாற்றில் அணைக்கட்டும் முயற்சியை தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டினுடைய அனுமதியையோ ஒப்புதலையோ பெறாமல் அணையை கட்டி வருவது கண்டனத்திற்குரியது" எனப் பேசினார்.
இதையும் படிங்க: ஈரோடு நம்பியூர் பகுதியில் வீடுகளில் புகுந்த வெள்ளம்.. பொதுமக்கள் கடும் அவதி! - ERODE RAIN