ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெங்கநாயக்கன்பாளையம் குட்டையில் கடந்த 2021ஆம் ஆண்டு தலை மற்றும் முகத்தில் பலத்த காயத்துடன் 55 வயது உடைய கட்டட தொழிலாளர் இறந்து கிடந்தார். அந்த சடலத்தைக் கைப்பற்றிய புன்செய் புளியம்பட்டி காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த விசாரணையில் கொல்லப்பட்ட நபர் கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி ரங்கசாமி (வயது 56) எனத் தெரியவந்தது. இதனை தொடர்ந்து கொலையாளியைப் பிடிக்கக் காவல் துறை தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று புன்செய் புளியம்பட்டி பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடாக இருவரைக் கண்ட காவல் துறை. இருவரைப் பிடித்து விசாரித்ததில், அவர்கள் புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த பிரகாஷ் (வயது 37) தனசேகர் (வயது 36) எனத் தெரியவந்தது. இவர்கள் 3 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் வெளிவந்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரகாஷ் (வயது 37) தனசேகர் (வயது 36) ஆகிய இருவரும் தனசேகர் என்பவர் புஞ்சை புளியம்பட்டி டாஸ்மாக் பாரில் வேலை செய்து வந்ததும். பிரகாஷ் என்பவர் பார் அருகே சில்லி சிக்கின் கடை வைத்திருந்ததாகவும், இந்நிலையில் கொலை செய்யப்பட்ட கட்டடத் தொழிலாளி ரங்கசாமி மது அருந்துவதற்காக டாஸ்மாக் பாருக்கு வந்து அருகே உள்ள சில்லி சிக்கன் கடையில் அடிக்கடி பணம் தராமல் வாங்கி சென்றதாகக் கூறப்படுகிறது.