சென்னை:முக்குலத்தோர் புலிப்படை சங்கம் வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கிறது என அறிக்கை வெளியிட்ட நிலையில், அக்கட்சியின் தலைவர் கருணாஸ் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலினை இன்று சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர் “தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்து சீர் மரபினர் சான்றிதழ் தொடர்பான எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்தேன். வரக்கூடிய தேர்தலில் மதவாத சக்தியை, மதத்தை வைத்து மக்களைப் பிரிக்கும் பாஜகவை வீழ்த்த, இந்தியா கூட்டணியை ஆதரிப்பதோடு, எல்லா மக்களுக்குமான அரசு அமைய வேண்டும் என திமுக கூட்டணி போட்டியிடும்.
40 தொகுதியிலும் நான் உட்பட எங்கள் கட்சியினர் அனைவரும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். கடந்த 10 ஆண்டுக்கால அவலங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவுள்ளோம்” என்றார். பின்னர், டி.டி.வி தினகரன் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது குறித்த கேள்விக்குப் பதிலளித்தவர், மக்களை முட்டாள் என நினைப்பவர்கள் தான் முட்டாள். 2019ம் அண்டு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட டி.டி.வி தினகரன் தற்போது பாஜக கூட்டணியில் ஒரு சீட்டு தான் எதிர்பார்த்தேன், இரண்டு சீட்டு கிடைத்தது என்பது வேதனை அளிப்பதாகும் என கூறினார்.
இதையும் படிங்க:வாடிக்கையாளரைப் போல் நைசாக பேசி.. சைசாக செல்போனை திருடிச் சென்ற நபர்.. சிசிடிவி காட்சிகள் வெளியீடு - MOBILE PHONE THEFT IN VELLORE