தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘‘வரும் தேர்தல், இன்னொரு சுதந்திரப் போராட்டம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்’’ - மதுரை பிரச்சாரத்தில் கனிமொழி பேச்சு! - MP Kanimozhi criticised bjp - MP KANIMOZHI CRITICISED BJP

MP Kanimozhi election campaign: ஜனநாயகத்தின் மீது பாஜகவிற்கு நம்பிக்கை கிடையாது, இந்த தேர்தல் இன்னொரு சுதந்திரப் போராட்டம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என மதுரையில் பிரச்சாரம் மேற்கொண்ட கனிமொழி பேசியுள்ளார்.

மதுரை பிரச்சாரத்தில் கனிமொழி பேச்சு
இந்த தேர்தல், இன்னொரு சுதந்திர போராட்டம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 4, 2024, 8:49 PM IST

‘‘இந்த தேர்தல், இன்னொரு சுதந்திர போராட்டம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்’’

மதுரை:அருணாச்சல பிரதேசத்தில் சீனா ஆக்கிரமித்து, பெயர் மாற்றமே செய்து விட்டது, இதைக் கேட்பதற்கு மோடிக்குத் தைரியம் கிடையாது என பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி பேசியுள்ளார். இந்தியா கூட்டணி சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிடும் சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு வாக்கு கேட்டு பெத்தானியாபுரத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி இன்று (ஏப்.04) பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "பாஜக அரசு ஓரவஞ்சனை செய்து வருகிறது, நம்மை மதிப்பது கிடையாது. மதுரையில் பல ஆண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட தேசிய மருந்தியல் ஆய்வு நிறுவனத்திற்கு, இதுவரை பணம் ஒதுக்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி விட்டு போனதோடு சரி.

இதுவரை என்ன வானது என யாருக்கும் தெரியாது, பிற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் எல்லாம், ஒன்றிய அரசின் நிதியில் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டு எய்ம்ஸ் மட்டும் ஜப்பானில் போய் காசு வாங்கிட்டு வந்து தான் கட்ட வேண்டுமாம். மதுரை விமான நிலையத்தைப் பன்னாட்டு முனையமாக மாற்றக்கோரி விடுத்த கோரிக்கையை இதுவரை செயல்படுத்தவில்லை. உபியில் ஒன்றும் கிடையாது, ஆனால் அங்கு பல பன்னாட்டு விமான நிலையங்களை அமைத்துத் தருகிறார்கள்.

ஆட்சிக்கு வந்தால் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதாக மோடி வாக்குறுதி கொடுத்தார், அது குறித்துக் கேட்டால் பக்கோடா போடச் சொல்கிறார் அமித்ஷா. நாங்கள் பக்கோடா போடுவதற்கு நீங்கள் எதற்கு ஆட்சியில் இருக்க வேண்டும்?அருணாச்சல பிரதேசத்தில் சீனா ஆக்கிரமித்து, பெயர் மாற்றமே செய்து விட்டது. இதை பற்றி எல்லாம் கேட்பதற்குத் தைரியமோ, திராணியோ மோடிக்கு கிடையாது. இதை நாம் கேட்டால் நம்மை நக்சல் என்பார்கள், ரெய்டு நடத்துவார்கள்.

போராடும் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்துவிட்டு, ஆட்சி நடத்துகிறது பாஜக. தன்னுடைய தேர்தல் அரசியலுக்காக புல்வாமாவில் நம்முடைய வீரர்களைப் பலி கொடுத்தவர்களுக்கு நம் மீது என்ன அக்கறை இருக்க போகிறது? பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் நடக்கும் கடைசி தேர்தல் இது தான். ஜனநாயகத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை கிடையாது. மோடி நாடாளுமன்றத்திற்கு வரவேயில்லை. இந்த தேர்தல் இன்னொரு சுதந்திரப் போராட்டம் என்பதைப் புரிந்து கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும்", என பேசினார்.

இதையும் படிங்க: மணப்பாறையில் அமைச்சர் உதயநிதி பிரச்சாரத்தில் ஆம்புலன்ஸ் திருப்பி அனுப்பப்பட்டதாகக் குற்றச்சாட்டு! - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details