தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் சடலமாக மீட்பு - கணவரிடம் விசாரணை! - Mother and 2 children dead - MOTHER AND 2 CHILDREN DEAD

கோவை ஒண்டிப்புதூர் அருகே தாய் மற்றும் 2 பெண் குழந்தைகள் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்கள் மற்றும் கணவர் தங்கராஜ் புகைப்படம்
உயிரிழந்தவர்கள் மற்றும் கணவர் தங்கராஜ் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 8, 2024, 3:03 PM IST

கோயம்புத்தூர்:கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ்(40). இவரது மனைவி புஷ்பா(36). இவர்களுக்கு ஹரிணி (9), மற்றும் ஷிவானி (3) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தங்கராஜ் ஒர்க் ஷாப், பெயிண்டிங் போன்ற கிடைக்கின்ற வேலைக்கு சென்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.

புஷ்பா வீட்டு வேலைக்கு சென்று வருமானம் ஈட்டி வந்தார். இந்த நிலையில் தங்கராஜ் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்ததாகவும் கூறப்படுகிறது.இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே நாள்தோறும் வாக்குவாதம் சண்டைகள் ஏற்பட்டதாகத தெரிகிறது.

இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) காலை தங்கராஜ் அக்கம்பக்கத்தினரை அழைத்து தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் தண்ணீர் தொட்டிக்குள் கிடப்பதாகவும் ஒரு குழந்தையை மீட்ட நிலையில் இன்னொரு குழந்தை மற்றும் மனைவியை மேலே எடுப்பதற்கு உதவி செய்யுங்கள் என்று அணுகியுள்ளார்.

தங்கராஜ் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தங்கராஜை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாய், 2 குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டனரா? அல்லது கொல்லப்பட்டார்களா? என்று தங்கராஜிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:ஜாமினில் வெளியே வந்த நபர் வீடு புகுந்து வெட்டிக்கொலை.. 48 மணிநேரத்தில் 2 படுகொலையால் திண்டுக்கல்லில் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details