திருப்பத்தூர்:வாணியம்பாடி அருகே இரு பெண் குழந்தைகளை ஆதரவற்றோர் விடுதியின் முன்பு இரவோடு இரவாக பெற்ற தாய் விட்டுச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து உமராபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது இரண்டு பெண் குழந்தைகளையும் மீட்டு அவர்களது தந்தையிடம் ஒப்படைத்துள்ளனர்.
விசராணையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பெருமாள்பேட்டை பகுதியில் கருணை இல்லம் ஆதரவற்றோர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று (ஜனவரி 03) வெள்ளிக்கிழமை நள்ளிரவு, கருணை இல்லம் விடுதியின் முன்பு குழந்தைகள் அழுகை சத்தம் கேட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்த போது, இரு பெண் குழந்தைகள் அழுது கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர போலீசார் இரண்டு பெண் குழந்தைகளையும் மீட்டு, தற்காலிகமாக கருணை இல்ல நிர்வாகி டேவிட் சுபாஷிடம் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து, பெண் குழந்தைகளை விட்டு சென்றது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்துள்ளனர். இதில், ஒரு நபர், இரண்டு பெண் குழந்தைகளை கருணை இல்லம் முன்பாக விட்டு சென்றதும், சற்று தூரத்தில் ஒரு பெண் நின்று கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, போலீசார் பெண் நின்று கொண்டிருந்த இடத்தில் ஆய்வு செய்த போது, அப்பகுதியில் இருந்து ஒரு கைப்பையை கைப்பற்றியுள்ளனர்.
இதையும் படிங்க:"உள்ளாடை ஏன் நனையவில்லை?" - விழுப்புரம் சிறுமி மரணத்தில் எழுப்பப்படும் கேள்விகள்!