தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி: மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா கசிவு.. 29 பெண்கள் மருத்துவமனையில் அனுமதி! - THOOTHUKUDI AMMONIA GAS LEAK - THOOTHUKUDI AMMONIA GAS LEAK

thoothukudi ammonia gas Leakage: தூத்துக்குடியில் மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா கேஸ் கசிந்த விபத்தில் 29 பெண்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்தில் மாசு கட்டுப்பாட்டு பொறியாளர் முரளி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட பெண் ஊழியர்
மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட பெண் ஊழியர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 20, 2024, 10:36 AM IST

தூத்துக்குடி:தூத்துக்குடி, புதூர் பாண்டியாபுரம் பகுதியில் மீன்களை பதப்படுத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிலா சீ புட்ஸ்(Nila Sea Foods) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதி மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 2 மணியளவில் அந்த ஆலையில் மின் விபத்து காரணமாக அமோனியா கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக மீன் பதனிடும் நிறுவனம் முழுவதும் அமோனியா வாயு பரவியது.

இதில், அங்கு பணியில் இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 16 பெண்கள் என 29 பேருக்கு மூச்சு திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் காவல் நிலைய தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர்.

இதைத்தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடியில் உள்ள இரண்டு தனியார் அனுமதிக்கப்பட்டு அங்கு ஊழியர்களுக்கு சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தாளமுத்து நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மாசுக் கட்டுப்பாட்டு பொறியாளர் முரளி தலைமையிலான அதிகாரிகள், தடய அறிவியல் உதவி இயக்குனர் கலா லட்சுமி, தலைமையிலான கைரேகை நிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர் தேவ சுந்தரம், ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

முன்னதாக சிப்காட் தீயணைப்பு துறையினர் தொழிற்சாலையில் பாதிக்கப்பட்டபர்களை மீட்க சென்ற போது தீயணைப்பு வீரர் வெங்கடசாமி என்பவர் மயக்கமடைந்தார். இதனை தொடர்ந்து அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் சிகிச்சை பெற்று வருவேரின் எண்ணிக்கை 30-ஆக அதிகரித்துள்ளது.

தூத்துக்குடியில் தனியார் மீன் பதன ஆலையில் அமோனியா கேஸ் வெளியாகி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்து 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிறுவனத்தில் கடந்த ஜூன் 5, 2014 ஆம் ஆண்டு இதே போன்று வாயு கசிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமோனியா வாயு கசிவு காரணமாக நிலா சீ புட்ஸ்(Nila Sea Foods) தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

ஈடிவி பாரத் (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி இடையே ரயில் சேவை துவக்கம்.. எங்கெல்லாம் நின்று செல்லும்?

ABOUT THE AUTHOR

...view details