தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளநீர் இட்லி முதல் பருத்திப்பால் அல்வா வரை.. அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் கமகம விருந்து! - Muthamizh Murugan Maanaadu

Muthamizh Murugan Maanaadu: பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில், ஒரு லட்சம் பேருக்கு உணவு தயார் செய்யும் பணியில் 500க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் ஈடுபட்டு, பல்வேறு வகையான உணவுகளை தயார் செய்து வருகின்றனர்.

முத்தமிழ் முருகன் மாநாடு
முத்தமிழ் முருகன் மாநாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2024, 4:03 PM IST

Updated : Aug 24, 2024, 4:21 PM IST

திண்டுக்கல்: முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடான பழனியில் 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' இன்றும், நாளையும் என 2 நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு கடந்த 20 நாட்களுக்கு மேலாக முன்னேற்பாட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், மாநாட்டுக்கு வருகை தரும் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், ஆதீனங்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு இரண்டு நாட்களுக்கு மூன்று நேரம் இலவச உணவு வழங்க இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஏற்பாடு செய்துள்ளது.

முத்தமிழ் முருகன் மாநாட்டில் தயார் செய்யப்படும் உணவுகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

இதற்காக பிரத்யேகமாக எட்டு இடங்களில் உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டு, 500க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் பிரமாண்டமாக உணவு சமைத்து வருகின்றனர். வெளிநாட்டவர்களுக்குத் தேவையான உணவு வகைகள், உள்நாட்டு பிரமுகர்களுக்குத் தேவையான உணவு வகைகள் என பல்வேறு விதங்களில் பல்வேறு வகைகள் உணவுகளை தயார் செய்யும் பணியில் கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளிநாட்டில் இருந்து மாநாட்டுக்கு கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு காலை உணவாக ஷாஹி துக்டா, இளநீர் இட்லி, தஞ்சாவூர் மிளகு முந்திரி பொங்கல், நெய், பொடி ரோஸ்ட், பன்னீர் பூஜ்ஜியா, மோதி பூரி என காலை உணவாகவும், இரவு உணவாக ஹாட் பாம்பே ஜாங்கிரி, பனைவெல்லம் மைசூர்பா, வெஜ் மஞ்சூரியன், மினி ஆனியன் சமோசா, தக்காளி சாஸ், காஞ்சிபுரம் இட்லி, கருவேப்பிலை குழம்பு, மைசூர் மசாலா தோசை, வெஜ் ஆம்லெட், உடுப்பி கி சாம்பார்,

செட்டிநாடு கார சட்னி, ஆம்பூர் வெஜ் மட்டம் தம் பிரியாணி, மஸ்ரூம் பள்ளி பாளையம் கிரேவி, சாமை அரிசி தயிர் சாதம் ஆகியவையும், மதிய உணவாக சாதம், சம்பார், ரசம், புளிக்குழம்பு, தயிர், அப்பளம், உருளைக்கிழங்கு கூட்டு, வடை, வெண்டைக்காய் பொரியல், முட்டைக்கோஸ் பொரியல், ஊறுகாய், பருத்திப்பால் அல்வா, பாயாசம், தண்ணீர் பாட்டில் என பல்வேறு வகை உணவுகள் மக்கள் ஆங்காங்கே அமர்ந்து சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாநாட்டில் கலந்து கொள்ளும் ஒரு லட்சம் பேருக்கு 200 கிராம் அளவிலான பஞ்சாமிர்தம், குங்குமம், விபூதி, லேமினேசன் செய்யப்பட்ட முருகன் படம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பழனியில் துவங்கிய 'முத்தமிழ் முருகன் மாநாடு'..இரண்டு நாட்கள் என்னென்ன நிகழ்ச்சிகள்? இதோ முழு விவரம்! - Muthamizh Murugan Maanadu

Last Updated : Aug 24, 2024, 4:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details