தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் படிக்கும் 1 கோடி மாணவர்களின் செல்போன் எண் சரிபார்ப்பு - பள்ளிக்கல்வித்துறை - STUDENTS MOBILE NUMBER CHECKING - STUDENTS MOBILE NUMBER CHECKING

Students Cell Phone Numbers Verification: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு அளித்த செல்போன்களில் 99 லட்சத்திற்கும் மேற்பட்ட எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளதாகவும், 27 லட்சம் எண்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை கோப்புப்படம்
பள்ளிக்கல்வித்துறை கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 7:04 AM IST

சென்னை:கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. வரும் கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கான திட்டங்கள் குறித்தும், பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகளையும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பள்ளி மாணவர்களின் செல்பாேன் எண்கள் சரிபார்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் பெயர்களுடன் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்கள் 1 கோடியே 27 லட்சத்து 20 ஆயிரத்து 933 உள்ளது. இதில், பல பெற்றோருடைய செல்போன் எண்கள் தவறானதாகவும், சில எண்கள் உபயோகத்தில் இல்லாமலும் உள்ளன. மாணவர்களுக்கான நலத்திட்டங்களைச் செய்வதற்கும், அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியாமல் உள்ளது. மாணவர்களின் பெற்றோர் எண்களுக்கு ஒரு OTP அனுப்புவதன் மூலம், அவர்களின் செல்போன் எண்களை சரி பார்க்கின்றனர்.

அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி அல்லது தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண் அல்லது பாதுகாவலரின் எண் பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் அனைத்தும் எளிதில் தகவல் அனுப்ப உதவியாக இருக்கும்.

'வாட்ஸ்அப் கேட் வே' உடன் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இணைத்துக் கையெழுத்திட்டு, இந்த புதிய முயற்சியைச் செய்து வருகிறது. இந்த முயற்சியின் மூலமாக அந்தந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய கல்வி நிறுவனங்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்கள் அனைத்திற்கும் விரைவாக தகவல் அனுப்ப முடியும். பள்ளித்தலைமை ஆசிரியர்களின் மூலம் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் எளிதில் தகவல்கள் அனுப்புவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் செல்போன் எண்கள் ஒரு கோடியே 27 லட்சத்து 20 ஆயிரத்து 933 உள்ளன. இந்த எண்களை பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை முறைமை EMIS இணையதளம் மூலம் OTP அனுப்பி சரி பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிக்கல்வித்துறையின் கீழ், 38 லட்சத்து 99 ஆயிரத்து 464 மாணவர்களில் 34 லட்சத்து 33 ஆயிரத்து 631 மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. 4 லட்சத்து 65 ஆயிரத்து 833 மாணவர்களின் எண்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

தொடக்கக்கல்வித்துறையில் 27 லட்சத்து 91 ஆயிரத்து 372 மாணவர்களின் பெற்றோர்களில் 26 லட்சத்து 47 ஆயிரத்து 180 செல்போன் எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. 1 லட்சத்து 44 ஆயிரத்து 192 மாணவர்களின் பெற்றோர்களின் செல்போன் எண் சரிபார்க்கும் பணி நடக்கிறது. தனியார் பள்ளிகளில் உள்ள 59 லட்சத்து 60 ஆயிரத்து 516 மாணவர்களில் 38 லட்சத்து 26 ஆயிரத்து 681 மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண் சரிபார்க்கப்பட்டுள்ளது. 21 லட்சத்து 33 ஆயிரத்து 835 மாணவர்களின் செல்போன் எண் சரிபார்க்க வேண்டி உள்ளது.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் 69 ஆயிரத்து 581 மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களில் 15 ஆயிரத்து 116 மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண் மட்டுமே சரிபார்க்கப்பட்டுள்ளது. 54 ஆயிரத்து 465 மாணவர்களின் பெற்றோர் எண்கள் சரிபார்க்கப்படாமல் உள்ளது எனவும், பள்ளிகள் திறப்பதற்கு முன்னர் இந்தப் பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:செல்போன் எண் ஓடிபியை ஆசிரியர்களிடம் கூற மறுக்கும் பெற்றோர்? மாணவர்களின் செல்போன் எண்களை இணையத்தில் பதிவு செய்வதில் சிக்கல்! - Students Mobile Number Checking

ABOUT THE AUTHOR

...view details