தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் விடிய விடிய மழை.. 17 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு! - Chennai Rains - CHENNAI RAINS

Chennai Rains: சென்னை மாநகரில் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோப்புப் படம்
கோப்புப் படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 5, 2024, 9:27 AM IST

சென்னை:சென்னையில் சேப்பாக்கம், அண்ணா சாலை, கொளத்தூர், தேனாம்பேட்டை, சூளைமேடு, பட்டினப்பாக்கம், சாந்தோம், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மிதமான மழை பெய்தது.

தொடர்மழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிய நிலையில், வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதனிடையே, சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை தொடரும் எனவும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: பாம்பன் புதிய தூக்கு பாலத்தில் ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்!

ABOUT THE AUTHOR

...view details