ராமநாதபுரம்: பரமக்குடி அருகே உள்ள ஓட்டப்பாலத்தைச் சேர்ந்தவர் ரஜினி (36). இவரது நண்பர் பாண்டி. இந்த நிலையில், தனது நண்பர் பாண்டியுடன் இன்று மதுரைக்கு தனது இருசக்கர வாகனத்தில் ரஜினி சென்றுவிட்டு பரமக்குடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது, தெளிச்சாத்தநல்லூர் அருகே ரஜினியின் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்தது. இதனால், இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்து ரஜினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பாண்டி லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.