சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், சற்று கடுமையாகவே நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. 40 தொகுதிகளிலும் நாம்தான் வெற்றி பெறுவோம் என கூட்டத்தில் ஸ்டாலின் பேசினாலும், கள நிலவரங்கள் சில வார்னிங் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக சவால் அளிக்கக் கூடிய தொகுதிகள் அல்லது, பறிபோக வாய்ப்புள்ள தொகுதிகள் என குறைந்த பட்சம் 6 தொகுதிகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. கொங்கு மற்றும் வடமாவட்டங்களில் உள்ள தொகுதிகள் நெல்லையில் உள்ள குழப்பம் என, கொடுக்கப்பட்டிருக்கும் அறிக்கை திமுக தலைமைக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்திலேயே இருக்கின்றன. இதை உளவுத்துறை மூலமாகவும் உறுதிப்படுத்திக் கொண்ட நிலையில் தலைமைக் கழகம் கடுமை காட்டத் தொடங்கியிருக்கிறது.
சென்னையிலிருந்து இன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் காணொலி மூலம் பங்கேற்றார் மு.க.ஸ்டாலின். இக்கூட்டத்தில் பேசிய அவர், “நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் பெரும்பாலான மாவட்டங்களில் திருப்தியாக இருந்தாலும், ஒரு சில இடங்களில் பணிகள் மந்தமாக இருக்கிறது. சரியாக செயல்படும் நிர்வாகிகளுக்கு தான் கட்சியில் அங்கீகாரம் கிடைக்கும். 40 தொகுதிகளிலும் நாம்தான் வெற்றி பெறுவோம், அதற்கு ஏற்ப தேர்தல் பணியாற்ற வேண்டும். கூட்டணி கட்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.