தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஐடி துறைக்கு மாற்றப்பட்டது ஏன்? - மு.க.ஸ்டாலின் விளக்கம் - TN IT Minister

Minister PTR Palanivel Thiagarajan: நிதியமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை, ஐடி துறைக்கு மாற்றியதன் காரணத்தை சென்னையில் தொடங்கிய இரண்டு நாள் தகவல் தொழில்நுட்ப உச்சிமாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 2:00 PM IST

சென்னை:சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் 2 நாள் (Umagine TN 2024 conference) தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத்துறை செயலர், எல்காட் நிறுவன நிர்வாக இயக்குனர் உள்பட பல்வேறு தொழில் முதலீட்டாளர்களும் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த தொழில்நுட்பவியல் அரங்குகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “இரண்டு ஆண்டுகள் நிதி அமைச்சராக சிறப்பாக செயல்பட்டவர், பல மாற்றங்களுக்கு வித்திட்டவர் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

அவரை நான் ஐடி துறைக்கு மாற்றினேன். மாற்றியதற்கு காரணம், நிதித்துறை போன்று ஐடி துறையிலும் மாற்றங்கள் வரவேண்டும் என தன்னிடம் கொடுத்த பொறுப்பை, சிறப்பாக பணியாற்றுகிறார். தொழில்நுட்பத் துறையில், வேலைவாய்ப்பை அதிகரித்துள்ளதற்கு சான்றே, இந்த மாநாடு. அவர் பணி மீண்டும் சிறக்க வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.

1996-இல் கணினி வாசலை துவங்கி வைத்தவர் கருணாநிதி. கருணாநிதி ஆட்சிக் காலத்தில்தான் ஐடி துறை மிகவும் உயர்ந்தது. மேலும், கருணாநிதியை 'நவீன தமிழ்நாட்டின் சிற்பி' என அழைக்கப்படுவது அதனால்தான். ஐடி துறையின் வளர்ச்சியும், முன்னேற்றமும் நம் கண் முன்னாடி தெரிகிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் தனித்தன்மை. தனக்கு இரண்டு கனவுகள் உள்ளன. ஒன்று, ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம், மற்றொன்று உலகத்தில் மனிதவள தலைநகராக தமிழகத்தை மாற்றுவதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டது.

ஐடிக்கு, 'கருணாநிதியின் காலம் பொற்காலம்' என்பதால், அதனால்தான் அவரை நவீன காலத்தின் சிற்பி என அழைக்கிறோம். இந்த துறையில் தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தமிழ்நாட்டை உலகின் மனிதவள தலைநகரமாகவும், ஐடி துறையினர் தேடிவரும் நகரமாகவும் மாற்றுவோம். தொழில்நுட்பத்தில் உலக நாடுகள் அடையும் முன்னேற்றத்தைப் போல, அதே காலத்தில் அதே தொழில்நுட்ப வளர்ச்சி உருவாக உழைப்போம்' எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

இதையும் படிங்க:கச்சத்தீவு திருவிழா புறக்கணிப்பு.. வெறிச்சோடி காணப்பட்ட ராமேஸ்வரம் துறைமுகம்!

ABOUT THE AUTHOR

...view details