தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? - முதல்வர் ஸ்டாலின் கொடுத்த 'நச்' பதில்! - Udhayanidhi Stalin deputy cm issue

Udhayanidhi Stalin Deputy CM Issue: உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியா? என்ற கேள்விக்கு, உதயநிதி துணை முதலமைச்சராகும் காலம் இதுவரை கனியவில்லை என்ற வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் மற்றும் மு.க.ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் மற்றும் மு.க.ஸ்டாலின் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 5, 2024, 3:43 PM IST

சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.355.23 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு நலத்திட்ட பணிகளை இன்று (திங்கட்கிழமை) பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.8.45 கோடி செலவிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், ரூ.3.25 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிக்கு அடிக்கலும் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து, பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் ரூ.109 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் கட்டப்பட்டு வரும் சிறப்பு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், "அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க கோரிக்கை வலுத்து வருகிறதே என்ற கேள்விக்கு, துணை முதலமைச்சர் பதவி குறித்து கோரிக்கை வலுத்து வருகிறது.. ஆனால் அது பழுக்கவில்லை" என பதிலளித்தார்.

அதனைத் தொடர்ந்து சென்னையில் சிறிதளவு பெய்யும் மழைக்கே தண்ணீர் தேங்குவதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, சென்னையில் எங்கு தண்ணீர் தேங்குகிறது என ஒரு இடத்தையாவது எதிர்க்கட்சிகள் காட்ட வேண்டும். அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். எப்பேர்ப்பட்ட மழை வந்தாலும் எதிர்கொள்ள தமிழக அரசு தாயாராக உள்ளது" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: "வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு தவறான தகவல்" - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details