சென்னை:விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள சிந்தப்பள்ளி என்ற கிராமத்தில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், அஜித்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சிந்தப்பள்ளி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில், நேற்று (24-02-2024) பிற்பகல் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், அருணாச்சலபுரம் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.