சென்னை:அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் அன்னிய முதலீடு மற்றும் தொழில் வளர்ச்சி குறித்து 6-8-2024 அன்று வெளியிட்டுள்ள அறிக்கைக்கு, தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ரூ.10 லட்சம் கோடி மேல் முதலீடு:அதில், "2023-24ஆம் ஆண்டு ஒட்டமொத்த இந்தியாவிலும் அன்னிய முதலீடு குறைந்தபோதிலும், தமிழ்நாட்டில் 12.3 சதவீத முதலீடுகள் அதிகரித்திருக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டிற்கு 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை உறுதி செய்து, 31 லட்சம் வேலை வாய்ப்புகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார்.
ஜவுளித்துறையில் ரூ.500 கோடி மேல் ஊக்கத்திட்டங்கள்: 2024 ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கான குறைக் கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணுக் கொள்கையை (Semi conductor and Advanced Electronics Policy) உருவாக்கி வெளியிட்டார்.
ஒசூரில் முதன் முதலில் டி.வி.எஸ். நிறுவனத்தைக் கொண்டு போய் சேர்த்து, அங்கு தொழில்வளர்ச்சிக்கு வித்திட்டார். ஜவுளித் தொழில் குறித்தும் கவலைப்படும் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பாஜகவோடு கைகோர்த்திருந்த தனது ஆட்சிக்காலத்தில் ஒரு பைசா முதலீட்டைக் கூட ஜவுளித்துறைக்கு கொண்டு வந்து சேர்க்கவில்லை.
1 டிரில்லியன் டாலர் நிச்சயம்:முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் ஆட்சியில் தான் அண்மையில் ஜவுளித்துறைக்காக 6 சதவீத வட்டி மானியம் உள்ளிட்ட 500 கோடி ரூபாய்க்கு மேலான பல ஊக்கத்திட்டங்களை அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 முதல் 20 ஆயிரத்து 162.44 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஜவுளித் துறையில் மட்டும் வந்து குவிந்திருக்கின்றன. ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட பயணங்கள் மூலம் மட்டும் 10 ஆயிரத்து 881.9 கோடி ரூபாய் முதலீடும், 17 ஆயிரத்து 371 வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
ஒட்டுமொத்தமாக கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் ஏறத்தாழ 10 லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்து, 31 இலட்சம் நபர்களுக்கு மேல் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கப்பட்டுள்ளன. வெகுவிரைவில் 1 டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்கை எட்டுவது நிச்சயம். இனியேனும், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கைகள் விடுவதை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சியைப் பார்த்து ஒரு தமிழனாகத் தாங்களும் பெருமை கொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
join ETV Bharat WhatsApp Channel click here (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க:'மேட்டூர் அணையில் சிக்கித் தவித்த நாய்கள் என்னவாகின?' - அரசுத் தரப்பில் ஐகோர்ட்டில் விளக்கம்! - mettur dam dogs issue