தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

14 முதலீடுகளுக்கு ஒப்புதல் 46,931 பேருக்கு வேலைவாய்ப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு! - TN CABINET MEETING

அமைச்சரவை கூட்டத்தில் ரூ.38,698.80 கோடி முதலீட்டிற்கான 14 புதிய முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் டிஆர்பி ராஜா
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் டிஆர்பி ராஜா (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2024, 6:23 PM IST

சென்னை:சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்க்கு பிறகு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,"பேசிய அவர், ரூ.38,698.80 கோடி முதலீட்டிற்கான 14 புதிய முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த முதலீடுகள் மூலம் 46,931 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இதில் மின்னணு துறை சார்ந்த பிரின்டெட் சர்க்யூட் போர்டுகள் (PCB), குறைந்த மின்னழுத்த பேனல்கள், மொபைல் ஃபோன் தயாரிப்புகளுக்கான காட்சிமுறை உதிரிபாகங்கள் மற்றும் உறை தயாரித்தல், பயணிகள் சொகுசு வாகன உற்பத்தி, வாகனங்கள் சார்ந்த உதிரிபாகங்கள், உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் அதற்கான மென்பொருட்கள், பாதுகாப்புத் துறைக்கான உபகரணங்கள், மருத்துவத் துறை சார்ந்த ஊசி மருந்துகள் மற்றும் இதர மருந்துபொருட்கள் தயாரிப்பு, தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி, எரிசக்தி துறை சார்ந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியுடன் பசுமை ஹைட்ரஜன் / பசுமை அம்மோனியா உற்பத்தி, மின்வாகனங்கள் மற்றும் தொலைதொடர்பு நெட்வொர்க்குகள் குறித்த ஆராய்ச்சி & மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியுள்ளது என தெரிவித்தார்.

மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா மோட்டார்ஸ் லிமிடெட் ரூ.9000 கோடி முதலீடு செய்து வேலைவாய்ப்பு 5000 நபர்கள் கிடைக்க உள்ளதாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஃபாக்ஸ்கான் குழுமத்தின் துணை நிறுவனமான யூசான் டெக்னாலஜி (இந்தியா) பிரைவேட் லிமிடெட் மூலமாக ரூ.13180 கோடி முதலீடு செய்து 14000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, இராமநாதபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பிஎஸ்ஜி குழுமத்தின் துணை நிறுவனமான லீப் கீரின் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் மூலமாக ரூ.10375 கோடி முதலீடு செய்யப்பட்டு 3000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

இதையும் படிங்க:கோவைக்கு மீண்டும் செந்தில் பாலாஜி! 13 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

அரியலூர் மாவட்டத்தில் தைவான் நாட்டைச் சேர்ந்த டீன் ஷூஸ் குழுமத்தின் துணை நிறுவனமான ஃப்ரீடிரெண்ட் இன்டஸ்ட்ரியல் இந்தியா பிரைவேட் லிமிடெட் மூலமாக ரூ.1000 கோடி முதலீடு செய்து 15000 நபர்களுக்கு வேலைவாய்ப்பும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கேன்ஸ் சர்க்யூட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மூலமாக ரூ.1395 கோடி முதலீடு செய்து 1033 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்க உள்ளதாக கூறினார்.

மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட் ரூ.612.60 கோடி முதலீடு செய்து 1200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளதாக தெரிவித்தார். இந்த முதலீடுகளுக்கான ஒப்பதல் நடைப்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் பல்வேறு மாட்டங்களில் பரவலாக தொழில் திட்டங்கள் அமைய உள்ளது. மேலும் தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள திட்டங்கள் மூலமாக 46931 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. குறிப்பாக படித்து தகுதி பெற்ற நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பல துறைகளில் முதலீடுகள் அமைந்துள்ளது" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details