சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை அளித்துப் பேசினார். அப்போது,
- மத்திய அரசின் நியாமற்ற செயலால் தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டு ரூ.12,000 கோடி கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது.
- நிதி பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அநீதியை மத்திய அரசு செய்துள்ளது.
- தமிழ்நாட்டிற்கு மத்திய அரசின் பங்களிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
- மத்திய அரசு நிதி உதவி வழங்கும் திட்டத்தில் 50%வது நிதி பங்களிப்பை வழங்க வேண்டும்.
- ஜிஎஸ்டி வரிகள் தமிழ்நாட்டிற்கான உரிய பங்கீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும்.
- தமிழ்நாட்டில் 3,472 சூரிய மின் இணைப்புகள் இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது.
- கட்டுமான வளர்ச்சி திட்டங்களில் மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொண்டு வருகிறது.
- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்த அரசின் கொள்கை முடிவு பரிசீலனையில் உள்ளது.
- 20,830 மெகாவாட் என்னும் மின் தேவையின் உச்சத்தை நாம் கடந்த ஆண்டில் எட்டி உள்ளோம்.
- தமிழ்நாட்டில் மே மாதம் மட்டும் 20,000 மெகாவாட் அளவில் மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
- 4,600 மெகாவாட் மின் தேவை சென்னையில் மே மாதத்தில் மட்டும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
- கடந்த அண்டு 800 மெகாவாட் வட சென்னை அணுமின் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.