சென்னை:கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று இரவு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பேருந்தில் இருந்த பயணிகளிடம் உரையாடி குறைகளை கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது; '' சிறப்பு பேருந்துகள் மூலம் முதல் நாளில் ஒரு லட்சம் பயணிகள் பயணம் செய்திருந்தார்கள். நேற்று (அக்.29) இரண்டு லட்சத்து 31 ஆயிரம் பேர் பயணம் செய்திருந்தார்கள். இன்றைய தினம் (அக்.30) மாலை இந்த நேரம் வரை ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 925 பேர் பயணம் செய்திருக்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாக இதுவரை மூன்று லட்சத்து 41 ஆயிரத்து 738 பேர் பயணம் செய்திருக்கிறார்கள். இன்னும் ஒரு லட்சத்து மேற்பட்ட பயணிகள் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக அனைத்து பேருந்துகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் வயது வரம்பை 60ஆக குறைக்க வேண்டும் - பிரதமருக்கு திருமாவளவன் கடிதம்!