தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மோசடி வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜர்! - SENTHIL BALAJI CASE

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர்
நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் (Credits - ETV Bharat tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2024, 4:21 PM IST

சென்னை : கடந்த 2011 முதல் 2015 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் 2,222 பேர் குற்றம் சட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். இதில், உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, நேரில் ஆஜராகி வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2,222 பேரில் 150 பேர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதையும் படிங்க :இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மின் கட்டணம் குறைவு - தமிழக அரசு!

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி, எம்.எம்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார். மேலும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 149 பேர் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது, அனைவரும் தங்கள் தரப்புக்கு வாதாட வழக்கறிஞர்களை நியமித்துக் கொள்ள உத்தரவிட்ட நீதிபதி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 150 பேர் ஜனவரி 6, 7, 8 ஆகிய தேதிகளில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி 9-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details