தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சீமான் வாய்க் கொழுப்பிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்' - அமைச்சர் சேகர் பாபு கருத்து - sekar babu - SEKAR BABU

seeman remarks on karunanidhi: கருணாநிதியை குறித்து விமர்சித்ததாக சீமான் மீது பலர் புகார் கொடுத்து வருவதாகவும், சாத்திய கூறுகள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சேகர் பாபு
அமைச்சர் சேகர் பாபு (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 13, 2024, 2:16 PM IST

சென்னை: சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், ஆந்திரா - கர்நாடகா போன்ற மாநிலங்கள் மற்றும் கிருஷ்ணகிரி, தருமபுரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்வதற்காக திருமழிசை துணைக்கோள் நகரத்தில் 350 கோடி மதிப்பீட்டில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

அமைச்சர் சேகர் பாபு (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த பணிகளை அமைச்சர் சேகர் பாபு இன்று (ஜூலை 13) அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பணிகள் எப்போது முடியும்? எந்த அளவுக்கு பணிகள் முடிந்துள்ளது என்பது குறித்து நீண்ட நேரம் அதிகாரியுடன் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார்.

இதனையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது; '' திராவிட மாடல் ஆட்சியை எதிர்க்கின்ற அனைத்து கட்சியினருக்கும் எந்தவிதமான பொருளும், ஆயுதமும் கையில் கிடைக்கவில்லை கையில் கிடைக்கின்ற ஆயுதங்களை எல்லாம் இந்த ஆட்சியாளர்கள் மீது தூக்கி எரிய முற்படுகிறார்கள்'' என்றார்.

மேலும், ''எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஆட்சி காலத்தில் பாலும், தேனும் ஆராய் ஓடியதா? அவரது தலைவர் (ஜெயலலிதா) என்று போற்றக்கூடிய கொடநாடு பங்களாவில் காவலரின் உயிரைகூட காப்பாற்ற முடியாத துப்புகெட்ட ஆட்சி நடத்தியவர் சட்டம், ஒழுங்கை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை'' என சாடினார்.

தொடர்ந்து பேசிய சேகர்பாபு '' காய்ந்த மரத்தின் மீது கல் விழும்.. அவர் (சீமான்) தொடர்ந்து வாய்க்கொழுப்பு எடுத்து பேசி வருகிறார். அவரது உயரம் அவருக்கே தெரியவில்லை. கண்ணாடி கூண்டிலிருந்து கல் எரிந்து கொண்டிருக்கிறார். திமுக கற்கோட்டை, திரும்ப தாக்க வேண்டும் என்று நினைத்தால் அவர் தாங்க மாட்டார். சீமான் மீது பொதுநல விரும்பிகள் புகார் கொடுத்து வருகின்றனர். சட்டப்படி சாத்திய கூறுகள் இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதே பாட்டை பாடியதற்காக ஏற்கனவே சீமான் வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்துள்ளார். அதே வார்த்தையை மீண்டும் பயன்படுத்துகிறார் என்றால் அரசியல் பார்வை அவர் மீது திரும்ப வேண்டும் என்பதற்காக பேசி வருகிறார்.

தரையில் உருண்டு புரண்டாலும் சரி, தரையில் தவழ்ந்து வந்தாலும் திராவிட மாடல் ஆட்சிக்கு கலங்கம் விளைவிக்க முடியாது.. சீமான் வாய்க்கொழுப்பிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்'' என அமைச்சர் சேகர் பாபு இவ்வாறு கூறினார்.

இதையும் படிங்க:15 ஆசிரியர்களுடன் லீவு போட்டு வெளியே போன எச்.எம்.. கல்வித்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!

ABOUT THE AUTHOR

...view details