தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"கருணாநிதிகூட 5ஆம் வகுப்புதான் படித்திருக்கிறார்" - ஆளுநரின் கால்டுவெல் குறித்த கருத்துக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி! - கால்டுவெல்

Minister Regupathy: கல்லூரியில் படித்துவிட்டுதான் ஒருவர் கருத்த எழுத வேண்டும், சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த பொருள் குறித்து தகவல் தெரிந்தால் போதும் என கால்டுவெல் குறித்த ஆளுநரின் சர்ச்சைக்குரிய கருத்திற்கு அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார்.

Minister Regupathy
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 6, 2024, 3:48 PM IST

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் உள்ள மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியின் 144ஆம் ஆண்டு கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு, வாழ்த்துரை வழங்கி, மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "பிஷப் கால்டுவெல் ஒரு சிறந்த ஆய்வாளர், ஒருவர் படித்து விட்டு வந்துதான் தனது கருத்துக்களைச் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூட 5ஆம் வகுப்புதான் படித்துள்ளார். ஆனால், அவர் எழுதிய தொல்காப்பியம் போன்ற உரையை வேறு எந்த அறிஞர்களும் எழுத முடியாது.

அதனால் ஒருவர் கல்லூரி படிப்பை படித்து விட்டு வந்துதான் எழுத வேண்டும், கருத்துச் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த பொருள் குறித்து தகவல் தெரிந்தால் போதும். தமிழ்நாடு அரசியலில் தற்போது பாஜகவும் இல்லை, அதிமுகவும் இல்லை. திமுகவிற்கு எதிர் குரல் எழுப்ப வேண்டும் என்பதற்காகவும், ஆளுநர் பேசுபொருளாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இது போன்ற கருத்துக்களைப் பேசி வருகிறார்.

பாஜகவைப் போல் அவரும் ஒரு எதிர்கட்சியினரைப் போல் செயல்பட்டு வருகிறார். தேர்தலுக்காக எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது போல், கண்துடைப்பு வேலைகளைச் செய்கின்றனர். தேர்தலுக்கான கண்துடைப்பு பணிகளைச் செய்வதில் அவர்கள் மிகுந்த கெட்டிக்காரர்கள். தேர்தல் முடிந்ததும் பணிகளை நிறுத்திவிடுவார்கள்.

மோடி 10 பணக்காரர்களிடம் கொடுத்துள்ள பணத்தைக் கொண்டு வந்தால், இந்தியாவில் உள்ள அனைவரும் கோடீஸ்வரர்களாக மாறிவிடலாம். திமுகவினர் எந்த பணத்தையும் கொள்ளையடிக்கவில்லை, எங்களிடம் எந்தப் பணமும் இல்லை. எங்களிடம் எங்கு வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் வந்து சோதனை செய்து கொள்ளட்டும். எங்களுக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. மோடி சொல்கிற இது போன்ற கருத்துக்களுக்கு எல்லாம் மக்கள் மதிப்பு கொடுக்க மாட்டார்கள்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் தேர்தலில் போட்டி" - தமிழக தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details