சென்னை:அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கத்தில் தமிழ்நாடு மாநில கவுன்சில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்பாக தமிழ்நாடு அறிவியல் அறிஞர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழக அரசின் உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் டி.ஆபிரகாம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஜே.பிரகாஷ் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.
இந்த விழாவில் தமிழக அறிவியலறிஞர்கள் விருதுகள் 2018 முதல் 2021 ஆம் ஆண்டு வரை வேளாண்மையியல், உயிரியல், வேதியியல், சுற்றுச்சூழல், அறிவியல், பொறியியல், தொழில்நுட்பவியல், கணிதவியல், மருத்துவவியல், இயற்பியல், சமூகவியல், கால்நடையியல் உள்ளிட்ட பிரிவுகளில் 4 ஆண்டுகளில் 40 பேருக்கு தமிழக அறிவியலறிஞர் விருதுகள் வழங்கப்பட்டது.
பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, “இந்தியாவிலலே அதிகளவு தமிழகத்ததில் தான் 52 சதவீதம் உயர்கல்வி படிக்கிறார்கள். அதற்காக உருவாக்கப்பட்டது தான் அறிவியல் தொழில்நுட்பம். படிக்கும் போதே வளர வேண்டும். ஆராய்ச்சி பணிகளை ஊக்கப்படுத்த வேண்டும். 10 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ரூ.25 லட்சம் கொடுத்து ஊக்கப்படுத்தி உள்ளனர். எங்கள் ஊரை சேர்ந்த விஞ்ஞானி முத்துவேல் என்பரும் அதில் உள்ளார்” என்றார்.