தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருவரை கொன்ற தெய்வானை யானைக்கு வனத்துறை அனுமதி இல்லையா? - அமைச்சர் ஷாக் தகவல்! - TIRUCHENDUR TEMPLE ELEPHANT

திருச்செந்தூர் கோயிலின் தெய்வானை யானை வனத்துறை அனுமதி பெறாமலேயே கோயிலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி, தெய்வானை யானை கோப்புப்படம்
அமைச்சர் பொன்முடி, தெய்வானை யானை கோப்புப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2024, 6:44 PM IST

சென்னை:சென்னைதலைமைச் செயலகத்தில் வனத்துறை சார்பில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு வனத்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, அந்த சாலையின் நடுவே சில இடங்களில் வனத்துறை நிலங்கள் வருவதால் சாலைப்பணிகள் முழுமை பெறாமல் உள்ளன. அதற்கான அனுமதியை வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு கோரிக்கை வந்துள்ளது'' என தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து, '' யானை, புலி உட்பட வன உயிரினங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடலோர பகுதிகளை பாதுகாக்கவும் வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதை தடுக்க வனத்துறை சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது'' என கூறினார்.

சில தினங்களுக்கு முன்பு திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை தாக்கி உதயகுமார் மற்றும் சிசுபாலன் ஆகிய இரண்டு பாகன்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதையும் படிங்க:'விஜயை நாங்கள் வரவேற்றோம்'.. 'திருமாவளவனுக்கு அழுத்தம்' ஏற்பட்டிருக்கு - செல்லூர் ராஜு பேச்சு

இந்நிலையில், இன்று அதுகுறித்து பேசிய அமைச்சர் பொன்முடி, வனத்துறை அனுமதி பெறாமல்தான் திருச்செந்தூரில் தெய்வானை யானையை வைத்திருந்தனர். அந்த யானை அசாம் மாநிலத்திலிருந்து வந்தது என ஊடகங்களில் கூட செய்திகள் வெளியாகியிருந்தன. கோயில் யானைகளுக்கு வனத்துறையிடம் அனுமதி பெறுவது குறித்து அறநிலையத்துறையிடம் பேசி வருகிறோம். திருச்செந்தூர் கோவில் யானையை கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் என்றும் அந்த அறிக்கையின் அடிப்படையில் சிறப்பு முகாமுக்கு அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், அறநிலையத்துறையினர் கோயில் யானைகளை முறையாக பராமரிக்காத போதுதான் யானைகளால் விபத்துகள் ஏற்படுகின்றன எனவும் கோயில் யானைகளை பராமரிக்க வேண்டிய பொறுப்பு அறநிலையத்தினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினருடையது. அரிட்டாபட்டி நிலம் வருவாய்துறையின் அறக்கட்டளை எனும் பெயரில் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியை உயிர் பன்முகத்தன்மை பகுதியாக ஏற்கனவே அறிவித்துள்ளோம். அந்த பகுதியில் 250 பறவைகள் , வெள்ளை வல்லூரு, ராசாளி பறவை போன்ற பல புதிய பறவை இனங்கள் அங்கு உள்ளன. அரிட்டாபட்டி பகுதி வனப்பகுதியாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே முதலமைச்சரின் நோக்கம்.. அங்கு 'டங்க்ஸ்டன் ஆலை' அமைப்பது குறித்து மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசின் வனத்துறையிடம், மத்திய அரசு அனுமதி கேட்கும்போது அந்த திட்டத்தை நிராகரிக்க தமிழக அரசு சார்பில் வலியுறுத்துவோம்'' என்று கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details