சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைக்கான விவாதம் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. அந்த வகையில், சட்டப்பேரவையில் நேற்று (ஜூன் 26) வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறையின் அமைச்சர் பி.மூர்த்தி 23 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவை பின்வருமாறு:-
வணிகவரி:
- வணிகவரித்துறை அலுவலகங்களில் பணி செயல்பாடுகள் ரூ.5.48 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
- வணிகவரித்துறையில் உள்ள ஏழு மண்டல பயிற்சி மையங்களில், கணினி வழி பயிற்சி வழங்குவதற்குத் தேவையான கணினி உபகரணங்கள் ரூ.4.93 கோடி செலவில் கொள்முதல் செய்யப்படும்.
- கடலூர் கோட்டத்திற்குட்பட்ட பழமையான நிலையில் உள்ள கடலூர் ஒருங்கிணைந்த வணிகவரி கட்டடத்தினை இடித்து புதிய வணிகவரி கட்டடம் ரூ.3 கோடி செலவில் கட்டப்படும்.
- திருவள்ளூர் கோட்டத்திற்குட்பட்ட அலுவலகங்களுக்கு புதிய ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டடம் ரூ.22 கோடி செலவில் கட்டப்படும்
- சேலத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டட வளாகத்தில் சேலம் நுண்ணறிவு கோட்டத்திற்கு புதிய கட்டடம் ரூ.84 கோடி செலவில் கட்டப்படும்.
- சேலம் கோட்டத்திற்குட்பட்ட 3 வரிவிதிப்பு வட்டங்களுக்கு ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டடம் ரூ.6 கோடி செலவில் கட்டப்படும்.
- மதுரை கோட்டத்திற்குட்பட்ட பழமையான நிலையில் உள்ள வணிகவரி வளாக இணைப்பு கட்டடத்தினை இடித்து புதிய வணிகவரி அலுவலக கட்டடம் ரூ.6.30 கோடி செலவில் கட்டப்படும்.
- மதுரை கோட்டத்திற்குட்பட்ட தேனியில் ஒருங்கிணைந்த வணிகவரித்துறை அலுவலக கட்டம் ரூ 6.30 கோடியில் கட்டப்படும்.
- விருதுநகர் கோட்டத்திற்குட்பட்ட அலுவலகங்களுக்கு விருதுநகர் (நுண்ணறிவு) கோட்ட ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டடத்தில் கூடுதல் தளங்கள் ரூ.4.60 கோடி செலவில் கட்டப்படும்.
- காஞ்சிபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட அலுவலகங்களுக்கு காஞ்சிபுரத்தில் புதிய ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டடம் ரூ.4.20 கோடி செலவில் கட்டப்படும்.
- மதுரையில் உள்ள பிராந்திய கோட்ட வணிகவரி பணியாளர் பயிற்சி நிலைய கட்டடம் ரூ.3.29 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு, அக்கட்டடத்திற்கு கூடுதலாக ஒரு தளமும் அமைக்கப்படும்.
- வேலூர் கோட்டத்திற்குட்பட்ட ஆம்பூர் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு புதிய வணிகவரி அலுவலக கட்டடம் ரூ.1.70 கோடி செலவில் கட்டப்படும்.
- திருச்சி கோட்டத்திற்குட்பட்ட அறந்தாங்கி மாநில வரி அலுவலர் அலுவலகத்திற்கு புதிய வணிகவரி அலுவலக கட்டடம் ரூ.1.52 கோடி செலவில் கட்டப்படும்.
- விருதுநகர் கோட்டத்திற்குட்பட்ட பரமக்குடி மாநில வரி அலுவலர் அலுவலகத்திற்கு புதிய வணிகவரி அலுவலக கட்டடம் ரூ.1.38 கோடி செலவில் கட்டப்படும்.
- சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு இணைப்பு கட்டடத்தில் இயங்கி வரும் இரண்டு மின்தூக்கிகள் (Lift) ரூ.59 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படும்.
- ஈரோடு கோட்டத்திற்கு உட்பட்ட கரூர் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டடத்தில் பராமரிப்பு பணிகள் ரூ.26 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.