தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஃபெங்கல் புயலால் சேதமான பயிர்கள் குறித்து வேளாண்மைத் துறை அமைச்சர் ஆய்வுக் கூட்டம்! - NORTHEAST MANSOON

தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் மற்றும் வடகிழக்கு பருவ மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் காணொளி மூலம் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேதமடைந்த பயிர்கள்
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேதமடைந்த பயிர்கள் (Credits- TN DIPR X Page and ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 7 hours ago

சென்னை :தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் மற்றும் வடகிழக்கு பருவ மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் காணொளி மூலம் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்கள், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர்களுடன் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சேதமடைந்த பயிர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் 2,86,069 ஹெக்டேர் பரப்பில் வேளாண் பயிர்களும், 73,263 ஹெக்டேர் பரப்பில் தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்துள்ளன.

காணொளி மூலம் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (Credits- TN DIPR X Page)

இதனைத் தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக 2,25,655 ஹெக்டேர் பரப்பில் வேளாண் பயிர்களும், 45,634 ஹெக்டர் பரப்பில் தோட்டக்கலைப் பயிர்களும் சேதமடைந்துள்ளன. இதுநாள் வரை 6,30,621 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி மற்றும் அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 2906 மெ.டன் வேளாண் விளைப்பொருட்கள் சேதமடைந்துள்ளன. பயிர் சேதப்பரப்பு கணக்கீட்டுப் பணியினை நாளைக்குள் முடித்து, மாநில பேரிடர் நிவாரணத் தொகையினை விவசாயிகளுக்கு விரைவாக பெற்றுத் தரும் வகையில் தகவல்களை அரசிற்கு விரைவில் அனுப்பப்பட வேண்டும்.

இதையும் படிங்க:குறைந்தபட்ச ஆதார விலை வேண்டும்; மதுரையில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்!

மேலும், கணக்கீட்டின் போது பாதிப்படைந்த எந்த விவசாயியும் விடுபடக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டினை ஈடுகட்டும் விதமாக, பயிர்க் காப்பீட்டின் கீழ் விரைவாக இழப்பீடு வழங்குவது குறித்து விவாதிப்பதற்காக புள்ளியியல் துறை மற்றும் பயிர்க் காப்பீடு நிறுவனங்களுடன் நாளை (17.12.2024) கூட்டம் நடத்திட வேண்டும்" என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஆய்வுக் கூட்டம் (Credits- TN DIPR X Page)

இக்கூட்டத்தில் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வா, வேளாண்மைத் துறை இயக்குநர் முருகேஷ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் குமரவேல் பாண்டியன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details