தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராணி வேலுநாச்சியார் உள்ளிட்டோருக்கு சிலை..தலைவர்களின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாட்டம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு - TN Assembly 2024 - TN ASSEMBLY 2024

Minister M.P.Saminathan in TN Assembly 2024: ராணி வேலுநாச்சியாருக்கு சிலை அமைக்கப்படும், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் உள்ளிட்ட தலைவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 25, 2024, 1:34 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைக்கான விவாதம் கடந்த 20ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சட்டப்பேரவையில் நேற்று (ஜூன் 24) செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 25 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவை பின்வருமாறு:-

திருவுருவச் சிலை

  • சென்னை காந்தி மண்டப வளாகத்தில் சுதந்திரப் போராட்ட வீரமங்கை ராணி வேலு நாச்சியாருக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் திருவுருவ சிலை நிறுவப்படும்.
  • சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்களுக்கு மாவட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் திருவுருவ சிலை நிறுவப்படும்.
  • தமிழ்நாட்டில் முதன் முதலில் அச்சு இயந்திரத்தை நிறுவி தமிழுக்குப் பெருமை சேர்த்த சீகன் பால்குவுக்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படும்.
  • சிந்துவெளி நாகரிகத்தை வெளிப்படுத்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குநராகப் பணிபுரிந்த சர்.ஜான் ஹூபர்ட் மார்ஷலுக்கு சென்னையில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் திருவுருவ சிலை நிறுவப்படும்.
  • அறிவியல் விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவுக்கு கோயம்புத்தூரில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் திருவுருவ சிலை நிறுவப்படும்.
  • திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனுக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் திருவுருவ சிலை நிறுவப்படும்.
  • முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கு சென்னையில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் திருவுருவ சிலை நிறுவப்படும்.
  • தியாகி வை.நாடிமுத்து பிள்ளைக்கு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் திருவுருவ சிலை நிறுவப்படும்.
  • காவேரி மீட்புக் குழுவில் இணைந்து போராடி, விவசாயிகளின் நலன்களுக்காகப் பாடுபட்ட கரூர் சி.முத்துசாமிக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் திருவுருவ சிலை நிறுவப்படும்.

அரசு மரியாதையுடன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

  • செய்தி மக்கள் தொடர்புத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 31 மணிமண்டபங்கள், அரங்கங்களில் பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகள் உள்ளிட்ட மேலாண்மைப் பணிகள் தொடர் செலவினமாக ஆண்டுதோறும் ரூ.3.25 கோடியில் மேற்கொள்ளப்படும்.
  • செய்தி நிர்வாக மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மணி மண்டபங்கள், அரங்கங்களில் பராமரிப்புப் பணிகள் முதற்கட்டமாக ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
  • திவான்பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளான ஜூலை மாதம் 7ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
  • சுதந்திரப் போராட்டத் தியாகி அஞ்சலை அம்மாளின் பிறந்தநாளான ஜூன் மாதம் 1ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
  • மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பெருங்காமநல்லூரில் ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடி தங்கள் இன்னுயிரைத் துரந்த 16 வீரத் தியாகிகளுக்கு ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் நினைவு நாளாக கடைப்பிடிக்கப்படும்.
  • சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளான அக்டோபர் மாதம் 9ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
  • அல்லாள இளைய நாயக்கரின் பிறந்தநாளான தை மாதம் 1ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
  • சுதந்திரப் போராட்டத் தியாகி கு.மு.அண்ணல் தங்கோவின் பிறந்தநாளான ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
  • முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர் ப.சுப்பராயனின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி சென்னையில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
  • முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் பிறந்தநாளான அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
  • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் பிறந்தநாளான ஜூலை மாதம் 7ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
  • ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் பிறந்தநாளான மார்ச் மாதம் 1ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
  • சர்.ஏ.டி.பன்னீர்செல்வத்தின் பிறந்தநாளான ஜூன் மாதம் 1ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
  • தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனாரின் பிறந்தநாளான ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
  • எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
  • சென்னை தலைமைச் செயலகப் பத்திரிகையாளர்கள் அறை ரூ.16.75 லட்சம் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.

இதையும் படிங்க:குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் ஆண்களுக்கும் பாதுகாப்பு: எம்எல்ஏவின் கோரிக்கையால் அவையில் சிரிப்பலை!

ABOUT THE AUTHOR

...view details