தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.4 கோடி மதிப்பீட்டில் விஷவாயு கண்டறியும் சென்சார்.. அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு! - tn assembly session 2024 - TN ASSEMBLY SESSION 2024

Minister Mathiventhan in TN Assembly session: தமிழ்நாடு ஏரிகளின் நிகழ்நேர தரக் கண்காணிப்பு திட்டம், சென்னை தொழில்நுட்பக் கழகத்துடன் இணைந்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் ரூ.5 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்
காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 25, 2024, 4:10 PM IST

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி துவங்கியது. தற்போது, துறை சார்ந்த மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாசு கட்டுப்பாடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அவை,

  • தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்திற்கு 2024-2025ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.22.35 கோடி நிதியிலிருந்து 2 கோடி ரூபாய் பயன்படுத்தி தமிழ்நாடு பசுமை மரங்கள் திட்டம். மேலும், 3 கோடி ரூபாயை பயன்படுத்தி தமிழ்நாடு நாள்தோறும் நலவாழ்வு திட்டம். மேலும், 3 கோடி ரூபாயைப் பயன்படுத்தி தமிழ்நாடு புதுமை தொழில் முனைவோர் திட்டம்.
  • 2024-2025ஆம் ஆண்டில் 100 பள்ளிகளில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் நிதியிலிருந்து பசுமை பள்ளிக்கூட திட்டம் செயல்படுத்தப்படும்.
  • சென்னை மாநகராட்சியில் உள்ள பெருங்குடி மற்றும் புதுக்கோட்டை மாநகராட்சியில் உள்ள திருக்கட்டளை ஆகிய இடங்களில் உள்ள திடக்கழிவு குப்பைக் கிடங்குகளில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வெப்ப புகைப்பட கருவி மற்றும் விஷவாயு கண்டறியும் சென்சார்கள் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் நிறுவப்படும்.
  • சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகராட்சிகளின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் ஒலி மாசினை சென்சார் மூலம் அளவிடும் ஒலி மாசு வரைபட ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • வாரிய ஆய்வகங்களை காற்று மற்றும் நீர் பகுப்பாய்வுக்கான அதிநவீன கையடக்க கருவிகைளைக் கொண்டு மேம்படுத்தப்படும்.
  • தமிழ்நாடு ஏரிகளின் நிகழ்நேர தரக் கண்காணிப்பு திட்டம் (TNLMP) சென்னை தொழில்நுட்பக் கழகத்துடன் இணைந்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் ரூபாய் 5 கோடி செலவில் செயல்படுத்தப்படும். முதல்கட்டமாக பூண்டி, செம்பரம்பாக்கம், உதகமண்டலம் மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் செயல்படுத்தப்படும்.
  • கடற்கரை மாசினை குறைப்பதற்கான (TN-SHORE) திட்டத்தின் கீழ், 14 கடலோர மாவட்டங்களில் ரூ.100 கோடி மதிப்பீட்டில், கடற்கரை மாசுக் கண்காணிப்பு நிலையங்கள், நீலப் படைகள், மீன் வலை சேகரிப்பு மையங்கள், குறிப்பிட்ட நதி முகத்துவார பகுதிகளில் மிதக்கும் குப்பைத் தடுப்பான்கள் போன்ற மாசுக்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் ஒரு வாரம் முழுவதும் நெகிழிக் கழிவுகள் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

ABOUT THE AUTHOR

...view details