கன்னியாகுமரி:பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. இதில், பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்கூட்டத்தில் அவர் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், ஊரக வளர்ச்சி முகமை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்பட பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும், முடிவடைந்த பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், ஒவ்வொரு வீடுகளிலும் 6 அடியில் உறிஞ்சு குழிகள் அமைத்தல், குப்பைகள் மற்றும் திடக் கழிவுகளை உரமாக மாற்றுதல், நெகிழிகள் பயன்பாட்டை முற்றிலுமாக அகற்றுதல், மாநகராட்சிப் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துதல், சாலைப் பணிகளை விரைந்து முடித்தல்” குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.