சென்னை: தேனாம்பேட்டை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துத்துறை இயக்கத்தின் சார்பாக தேசிய அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு உட்பட 8 மாநிலங்களில் பணிபுரியும் ஆய்வக நுட்புனர்களுக்கு பயிற்சி பட்டறை நடைபெற்றது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இந்த கூட்டத்தில் குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேஷம், உத்தர பிரதேஷ்ம், ஒரிசா, ஆந்திர பிரதேஷ் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பணிபுரியும் ஆய்வக நுட்பனர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, “நியூட்ரிஷன் இன்டர்நேஷனல் நடத்திய இந்திய அயோடின் கணக்கெடுப்பின் படி 2018-19 ஆம் ஆண்டில் மக்கள் தொகையில் 76 சதவீதம் போதுமான அளவு அயோடின் கலந்த உணவை உட்கொள்வது தெரியவந்தது. ஒரு குழந்தையின் ஆயிரம் நாள் வளர்ச்சி பெரும்பகுதி இந்த அயோடின் சார்ந்தது இருக்கிறது. அயோடின் மனித வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் நோய் தடுப்பு துறைகள் செயல்படுவது, மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. அதற்காக தொடர் ஆராய்ச்சிகள், பகுப்பாய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தேசிய அயோடின் பற்றாக்குறை குறைபாடு தடுப்பு திட்டம் பொது சுகாதாரத் துறையில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் முதன் முறையாக கரோனாவுக்கு என அமைக்கப்பட்ட மரபணு பகுபாய்வு கூடத்தில், அடுத்த கட்ட நகர்வாக, டெங்கு குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வேதி பொருட்கள் மூலம் டெங்கு வீரியம் குறித்து ஆய்வு செய்யப்படும். அந்த வகையில் டெங்கு வீரியம் தன்மை குறித்து ஆராய்வதற்கு மரபணு பகுப்பாய்வு கூடம் அடுத்த இரண்டு நாட்களில் பயன்படுத்த உள்ளது.
இந்தியாவில் முதன் முறையாக டெங்கு வீரியம் குறித்த ஆய்வு செய்வது இங்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது. டெங்கு குறித்து அறிந்துக் கொள்ள ஆய்வகம் இருந்தாலும், வீரியம் குறித்து ஆய்வு செய்ய ஆய்வகம் இல்லை. எனவே, தமிழ்நாட்டில் 3 நாட்களில் ஆய்வகம் துவக்கப்பட இருக்கிறது. 2012 ஆம் ஆண்டு டெங்கு பாதிப்பால் 64 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 2017ல் 65 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு உலகம் முழுவதும் 80 நாடுகளில் டெங்கு வீரியமிக்க டெங்குவாக பரவி வருகிறது.
இப்படி ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை வீரியமிக்க டெங்கு உருவாகிக் கொண்டிருக்கிற காரணத்தினால் இந்த டெங்கு குறித்த ஆராய்ச்சியில் செய்யப்பட வேண்டும் என்பது அவசியமான ஒன்று. தமிழக அரசு சார்பாக வெளியிடக்கூடிய உப்பில் அதில் போதுமான அளவு அயோடின் அளவு உள்ளது என்பது ஆராய்ச்சி மூலமாக உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:விழுப்புரம் காவல் துறை கேட்ட 21 கேள்விகளுக்கு பதில் ரெடி;த.வெ.க. விக்கிரவாண்டி மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி எப்போது?