தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனமழை முன்னெச்சரிக்கை: 'ஒருவருக்கு காய்ச்சல் இருந்தாலும் முகாம் நடத்தப்படும்' - அமைச்சர் மா சுப்பிரமணியன் திட்டவட்டம்!

பருவமழைக்காலங்களில் ஒருவருக்கு காய்ச்சல் இருந்தாலும் முகாம் நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

By ETV Bharat Health Team

Published : 5 hours ago

மருத்துவ முகாம்களை ஆய்வு செய்த அமைச்சர் மா சுப்பிரமணியன்
மருத்துவ முகாம்களை ஆய்வு செய்த அமைச்சர் மா சுப்பிரமணியன் (Credits - ETVBharat TamilNadu)

சென்னை:வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று (அக்.15) நடைபெறுகிறது. அதனை சென்னை மயிலாப்பூரில் உள்ள சமுதாயக்கூடத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "வடகிழக்கு பருவமழையால் ஏற்படக்கூடிய பருவகால நோய்களை தடுப்பதற்கான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைக்கால சிறப்பு முகாம் 1000 இடங்களில் இன்று ஒரே நாளில் தொடங்கி நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் நடைபெறுகிறது.

டெங்கு, மலேரியா, டைப்பாய்டு போன்ற காய்ச்சல்களுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டு, மருந்து வழங்கப்படுகிறது. மழைக்காலங்களில் வரும் வயிற்றுப்போக்கு, சேற்றுப்புண் பாதிப்புள்ளவர்களுக்கு மருந்து வழங்கப்படுகிறது சென்னையில் 100 இடங்களிலும், தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் நடத்தப்படுகிறது" என்றார்.

அதிகாரிகளுக்கு அறிவுரை:அதனை தொடர்ந்து அவர் பேசுகையில், "முகாம் நடைபெறாத நாளில் ஒரு தெருவிலோ, ஊரிலோ ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் சிறப்பு முகாம் நடத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது.

கள நிலவரம்:சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றுவதற்கு 990 பல்வேறு திறன்களை கொண்ட மோட்டார் பம்புகள், 57 மாேட்டார் பொருத்தப்பட்ட டிராக்டர் , 169 நிவாரண மையங்கள் , 269 மரம் அறுக்கும் இயந்திரங்கள் தாயர் நிலையில் உள்ளது. கோபாலபுரம், சிந்தாதரிப்பேட்டையில் சமையல் கூடம் தயார் நிலையில் உள்ளது.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 3 நாட்களாக அடையாறு முகத்துவாரம், பக்கிம் கால்வாய், கூவம் முகத்துவாரம் போன்ற பகுதிகளில் மழைநீர் கடலில் கலக்கும் இடங்களில் ஆய்வு செய்து வருகிறார். மழைப்பாதிப்புகளை தடுப்பதற்கும், பாதிப்புகளை குறைப்பதற்கும், மழைக்கால நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்கவும் பணிகளை அரசு முடக்கி விட்டுள்ளது" என்றார்.

தண்ணீர் தேக்கம்?:மேலும், "இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பின்னர் மழைநீர் வடிகால் வாய்க்கல் அமைப்பதில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கும் பகுதிகளில் மழைநீர் வடிக்கால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 6 சென்டி மீட்டர் மழை பொழிந்து பின்னர் மழைநீர் தேங்கவில்லை. அதிகளவில் மழை பெய்யும் போது, மழைநீர் தேங்கி பின்னர் கடலில் கலக்கும் அளவில் இருக்கும்.

தற்பொழுது பாதிப்பு பெரியளவில் எங்கும் இல்லை. மழைநீர் வடிக்கால் தூர்வாரப்பட்டுள்ளதால் தேக்கம் இல்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது. தூய்மைப்பணியாளர்களுக்கு ஏற்கனவே ஆண்டுத்தோறும் முழு உடல் பரிசோதனை செய்து வருகிறோம். சென்னையில் எல்லா இடங்களிலும் மருத்துவக் கட்டமைப்பு இருந்து வருகிறது. யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தான் முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.

எடப்பாடி பழனிசாமி எந்தத் தெருவுக்கு வந்து மழைத்தண்ணீர் தேங்குகிறது என்பதை பார்த்தார். எடப்பாடி தொகுதியில் நேற்று சென்று மருத்துவமனையை திறந்து வைத்து விட்டு வந்தேன். அங்கிருந்த மக்கள் அரசு பொறுப்பேற்றப்பின்னர் தான் பாம்புக்கடிக்கும், நாய் கடிக்கு 2 ஆண்டுகளாக இருந்து வருகிறது.

இந்த ஆட்சியில் மழைகால முன்னெச்சரிக்கை நடத்தப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர் காலத்தில் எங்காவது சென்று பார்த்தாரா என்பதை கூற சொல்லுங்கள். மேலும் மழைக்காலங்களில் பொது மக்கள் 104 என்ற எண்ணிலும் தொடர்புக் கொள்ளலாம்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details