சென்னை :சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் அகற்றும் பணிகள் குறித்தும், வடிகால் சீரமைப்பு பணிகள் குறித்தும் ரிப்பன் மாளிகையில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "மாநகராட்சி எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நேற்று 17 முதல் 20 செ.மீ வரை மழை பெய்தும் நிலைமை கட்டுக்குள் உள்ளது. பெரும்பாலான இடங்களில் தேங்கிய மழைநீர் முழுமையாக அகற்றபட்டு உள்ளது. கணேசபுரம் சுரங்கப்பாதை தவிர, அனைத்து சுரங்கப்பாதைகளும் சீரான முறையில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் வெறும் 400 கி.மீ தான் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளபட்டன. ஆனால், திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் 1,135 கி.மீ கட்ட திட்டமிடப்பட்டு, 781 கி.மீ வரை முடிந்துள்ளன. 2ம் கட்டப் பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க :சென்னைக்கு தொடரும் ரெட் அலர்ட்.. எங்கெல்லாம் கனமழை பெய்யும்? - வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!