தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூர் சிம்ஸ் பார்க் அருகே துணை மின் நிலையம் திறப்பு!

K Ramachandran: குன்னூர் அருகில் சமயபுரம் ஆழ்வார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள குன்னூர் கோட்டம் துணை மின் நிலையத்தினை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

குன்னூர் அருகே புதிய துணை மின் நிலையத்தினை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்
குன்னூர் அருகே புதிய துணை மின் நிலையத்தினை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 11:48 AM IST

குன்னூர் அருகே புதிய துணை மின் நிலையத்தினை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

நீலகிரி: குன்னூர் நகரப் பகுதி மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளுக்கு, குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகில் உள்ள சமயபுரம் ஆழ்வார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள துணை மின் நிலையம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இந்த துணை மின் நிலையத்திற்கு, ஜெகதளா மின் நிலையத்திலிருந்து 7 கிலோமீட்டர் தூரத்திற்கு மின்சார கேபிள், பூமியின் அடியின் கீழ் வயர்களை புதைத்து மின்சாரம் கொண்டு வரப்பட்டுள்ளது. சிம்ஸ் பூங்கா அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் 12. 92 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. துணை மின் நிலைய திட்ட மதிப்பீடு 24. 99 கோடி ரூபாய் ஆகும்.

இந்த மின் நிலையத்திலிருந்து மின் பாதைகள் அமைக்கப்பட்டு, குன்னூர் பகுதியில் உள்ள பழங்குடி கிராமங்களுக்கும், நகரப் பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட உள்ளது. இதில் குன்னூர் சிம்ஸ் பார்க், பர்லியார் பாஸ்டர் இன்ஸ்டிட்யூட், சிம்ஸ் பார்க் ஏரியா, புருக்லேட்ஸ் ஏரியா, சிங்காரா எஸ்டேட் பர்லியார், சின்ன குரும்பாடி, பெரிய குரும்பாடி புதுக்காடு, மரப்பாலம் ஆகிய பகுதிகளுக்கு இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது.

இந்த துணை மின் நிலையத்தை, சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இந்த துணை மின் நிலையத்தின் மூலமாக சுமார் 9,700 வீடுகளுக்கும், 1,900 வணிக வளாகங்களுக்கும், சுமார் 300 தொழிற்சாலைகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என மின்சாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், மின்துறை சார்பில் மேற்பார்வை பொறியாளர் வில்வராஜ், சைட் பொறியாளர்கள் ரமேஷ், சிவக்குமார், குன்னூர் நகர மன்றத் தலைவர் வாசிம்ராஜ், குன்னூர் நகர செயலாளர் ராமசாமி மற்றும் மின்சாரத் துறை ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

தற்போது பழங்குடியின கிராமப் பகுதிக்குள் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை, மின்விளக்குகளால் இரவு நேரங்களில் வனவிலங்குகள் வாகன மோதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள ஏதுவாக அமையும் என்றும், இரவு நேரங்களில் வனவிலங்குகள் அச்சுறுத்தலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என பழங்குடி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:குன்னூர் - உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்.. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details