கோயம்புத்தூர்:கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 39 ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினர்.
ஆளுநரிடம் புகார்:அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற வந்த பிரகாஷ் என்ற மாணவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார்.
பல்கலைக்கழக விடுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் (Credit - ETV Bharat Tamil Nadu) இது குறித்து மாணவர் பிரகாஷ் கூறுகையில், "பல்கலைக்கழக வளாகத்தில் ஆதிதிராடவிடர் வகுப்பை சார்ந்த ஆராய்ச்சி மாணவர்களுக்கு இரண்டு விடுதிகள் உள்ளன.அந்த விடுதிகளை பொது விடுதியாகப் பயன்படுத்துகின்றனர். மேலும் பல்கலைக்கழக விடுதி பராமரிப்புக்காக ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள். ஆனால் கம்பர் விடுதியில் கழிவறை சரியாக கட்டப்படவில்லை. சேக்கிழார் விடுதியிலும் முறையாக பராமரிப்பதில்லை என்கிற போது ஒரு கோடி ரூபாய் எங்கே போகிறது? என்கிற கேள்வியையும் புகாரில் எழுப்பி உள்ளதாக" தெரிவித்தார்.
இதையும் படிங்க:"வீட்டு வேலை செய்ய சொல்றாங்க; தீசஸ் சமர்பிக்க லஞ்சம்" - பட்டமளிப்பு விழா மேடையில் ஆளுநரிடம் பரபரப்பு புகார்!
அமைச்சர் ஆய்வு:இதனைத் தொடர்ந்து பட்டமளிப்பு விழா நிறைவடைந்தவுடன் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மாணவர்கள் தங்கும் விடுதியை உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் கழிவறை சுத்தமாக வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது கழிவறையில் கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து அங்கிருந்த பல்கலைக்கழக நிர்வாகிகளைக் கடிந்து கொண்டார்.மேலும் "ஆளுநரிடம் புகார் செல்லும் வரை உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்களா? இப்படி ஒரு பெரிய விழா நடக்கும் போது புகார் வந்தால் ஆய்வு செய்ய வருவார்கள் என்கின்ற சிந்தனை கூட இல்லாமல் இருக்கிறீர்கள்" எனக் கடிந்து கொண்டார். இந்த ஆய்வின் போது கூடுதல் தலைமைச் செயலாளர் கோபால் மற்றும் உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்