சென்னை:திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானை, அப்பொறுப்பில் இருந்து கடந்த வாரம் விடுவித்து புதிய மாவட்ட பொறுப்பாளராக சேகர் நியமனம் செய்யப்படுவதாக திமுக தலைமை அறிவித்திருந்தது.
இந்நிலையில் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.