தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் விரைவில் ஆய்வு" - சட்டப்பேரவையில் அமைச்சர் கீதாஜீவன் உறுதி! - tn assembly

Minister Geeta Jeevan: தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதற்கான தேவை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

Minister Geeta Jeevan
அமைச்சர் கீதாஜீவன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 11:14 AM IST

Updated : Feb 15, 2024, 12:44 PM IST

சென்னை:இந்த ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர், கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, நான்காவது நாள் அமர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியின் அதிமுக உறுப்பினர் கடம்பூர் ராஜு, தமிழகம் முழுவதுமே உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு பாதுகாப்பான சுற்றுச்சூழல் இல்லை எனவும், இது குறித்து தமிழக அரசு உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்த சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், உறுப்பினரின் கோரிக்கையான அங்கன்வாடி மையங்களில் பாதுகாப்பான சுற்றுச்சுவர் கட்டுவது என்பது விரைவில் கட்டித் தரப்படும் என பதிலளித்தார். மேலும், இதற்கு முன்பு பேசிய மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, மொடக்குறிச்சியில் இயங்கி வரும் பல அங்கன்வாடி மையங்களில் சரியான குடிநீர் வசதிகள் இல்லை என்றும், கழிவறை வசதி மற்றும் சுற்றுசுவர் என எந்தவித வசதியும் இல்லை என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் கீதாஜீவன், மொடக்குறிச்சி தொகுதியில் எந்தெந்த பகுதியில் அங்கன்வாடி மையங்களில் தேவை இருக்கிறது என குறிப்பிட்டுக் கூறினால், அந்த அங்கன்வாடி மையங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கு; ஒருமித்த கருத்துடன் 5 நீதிபதி அமரவு தீர்ப்பு வாசிப்பு!

Last Updated : Feb 15, 2024, 12:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details