திருவண்ணாமலை: பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே.கம்பன், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, வேட்டவலத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த கார் மீது அமைச்சரின் மகன் சென்ற கார் நேருக்கு நேர் மோதி உள்ளது.
இதில், அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே.கம்பன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும், விபத்தில் படுகாயம் அடைந்த அவரது கார் ஓட்டுநர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதேநேரம், எதிரே மோதிய காரில் வந்தவர்களும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.