தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"117 நகரங்களில் புறவழிச்சாலை பணிகள் தீவிரம்" - சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்! - Chennai

TN Assembly: கந்தர்வகோட்டை தொகுதி எம்எல்ஏ சின்னதுரை புறவழிச் சாலை அமைப்பது குறித்து எழுப்பிய கோரிக்கைக்கு, 117 நகரங்களில் புறவழி சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 12:08 PM IST

சென்னை: நடப்பாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து மூன்றாவது நாள் அமர்வு இன்று (பிப்.14) காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்றைய வினாக்கள் விடை நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை கந்தர்வகோட்டை தொகுதி, கறம்படிக்குடி நகர் பகுதிக்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, கடந்த இரண்டு ஆண்டுகளில் நகரப்பகுதிகளில் புறவழிச் சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுரைப்படி நகர்ப்புற பகுதிகளில் புறவழிசாலை பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது 50 நகரப்பகுதிகளில் விரிவான திட்ட அறிக்கை தயார் நிலையில் உள்ளதாகவும், 35 பகுதிகளில் நிலம் எடுக்கும் பணி முடிவடைந்து புறவழி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அந்த வகையில் தான், கந்தர்வகோட்டை தொகுதியில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கானப் பணிகள் விரைவாக செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

மேலும் ஏற்கனவே, தமிழ்நாட்டில் நகர்ப் புறப்பகுதிகளில் எல்லா இடங்களிலும் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளதன் அடிப்படையில், 117 நகரங்களில் புறவழிச் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கானப் பணிகள் மேற்கொள்ளபட்டுள்ளதாகவும் அமைச்சர் எ.வ.வேலு மேலும் கூறினார்.

இதையும் படிங்க:சட்டப்பேரவையில் ஓபிஎஸ் இருக்கை மாற்றம்... சபாநாயகர் அப்பாவு உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details