வேலூர்:வேலூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இன்று காட்பாடி இருந்து ரயில் மூலம் சென்னை செல்ல இருந்தார். இதற்காக காட்பாடி ரயில் வந்த போது அவருக்கு திடீரென தலைவலி மற்றும் தலைச்சுற்றல் இருப்பதாக அருகில் உள்ள நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் அமைச்சர் துரைமுருகன்! - DURAI MURUGAN
வேலூரிலிருந்து சென்னைக்கு புறப்பட இருந்த அமைச்சர் துரைமுருகன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Published : Oct 24, 2024, 11:08 PM IST
இதன் பின்னர் உடனடியாக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டர். அங்கு அவருக்கு முழுமையாக உடல் பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அமைச்சர் துரைமுருகன் இப்போது நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அவர் வீடு திரும்பினார். தற்போது அமைச்சர்கள் மற்றும் திமுக மாவட்ட, மாநில நிர்வாகிகள் அமைச்சர் துரை முருகனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருவதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். வயது மூப்பு காரணமாக அவ்வபோது உடல் நல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார் அமைச்சர் துரைமுருகன், அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.