தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகில் உள்ள அடைக்கலாபுரத்தில் பனைத் தொழிலாளர்களுக்கு மின் தூக்கி இயந்திரம் மூலம் பனை ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் திருச்செந்தூர் தொகுதியைச் சேர்ந்த படித்த மீனவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். மேலும், இஸ்ரோவில் அப்துல்கலாம் முதல் சிவன் வரை பல விஞ்ஞானிகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான்.
இதனால் தமிழகத்தைச் சேர்ந்த இளம் விஞ்ஞானிகளுக்கு குலசேகரப்பட்டினம் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் வாய்ப்புகள் வழங்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்குத் தேவையான உதிரிப் பாகங்கள் தயாரிக்கக் கூடிய தொழிற்சாலைகள் வரவுள்ளது.