தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"கிடைக்கிற கேப்ல எல்லாம் இந்தியை திணிக்கிறார்கள்" தமிழிசைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி! - ANBIL MAHESH POYYAMOZHI

உருது மொழியை யாரும் திணிக்கவில்லை, ஆனால் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் இந்தி மொழியை திணிக்கிறார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விமர்சித்துள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன், அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழிசை சௌந்தரராஜன், அமைச்சர் அன்பில் மகேஷ் (Credits - ETV Bharat Tamil Nadu and Anbil Mahesh X)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2024, 8:47 PM IST

திருச்சி:திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய சமூக நல்லிணக்க 'மீலாது மாநாடு' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார். இதன் பின்னர் நிகழ்ச்சி மேடையில் அவர் பேசியதாவது,

"தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையா மும்மொழிக் கொள்கையா என தமிழிசை சௌந்தரராஜன் என்னைப் பார்த்து கேள்வி கேட்கின்றார். மேலும் இது கழகத்தின் கொள்கையா என்பதை நான்தான் விளக்க வேண்டும் என்கிறார் தமிழிசை சௌந்தரராஜன். சிறுபான்மையினரை மட்டுமல்ல, சிறுபான்மையினர் பேசும் மொழிகளையும் காப்பாற்ற வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.

அதை உணர்ந்துதான் உருது மொழி எங்கே கற்றுக் கொடுக்கப்படுகிறது. அந்த அரசு பள்ளிக்கு சென்று அன்பில்' என்னும் எனது பெயரைதான் உருது மொழியில் எழுதினேன்.சிறுபான்மையினருக்கு திமுக அரசு அரணாக உள்ளது என்பதை நீங்கள் ஒத்துக் கொள்ள முடியுமா?

சிறுபான்மையினரின் உடைமைகளை மட்டுமல்ல அவர்கள் உயிராகக் கருதக்கூடிய அவர்களின் மொழியையும் காக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது என்பதை நாங்கள் நன்கு அறிந்து உள்ளோம். உருது மொழி கற்கும் அனைத்து மாணவர்களும், அதே மொழியில் கல்வி கற்கிறார்கள் என்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது.

இதையும் படிங்க:"மொழி அரசியலை இனியாவது திமுக கைவிட வேண்டும்" - தமிழிசை செளந்தரராஜன்

மாணவர்கள் விரும்பினால் உருது மொழியில் எல்லா பாடங்களையும் படிக்கட்டும். அதற்கு நாங்கள் துணை நிற்கின்றோம்" என சொல்கின்றோம். ஆனால் உருது மொழியை யாரும் திணிக்கவில்லை. நீங்கள் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் இந்தி மொழியைத் திணிக்கிறீர்கள். சிறுபான்மையினர் என்றாலே உங்களின் கண்ணை உறுத்தும். ஏதாவது சீண்டிக்கொண்டே இருப்பீர்கள்.

அந்த சீண்டல் எல்லாம் தமிழ்நாட்டில் எடுபடாது. இதை 2019 தேர்தலிலும் நிரூபித்து விட்டோம். 2024 தேர்தலிலும் நிரூபித்து விட்டோம்.உங்களின் கனவுகள் எல்லாம் எடுபடாத இந்தியாவின் ஒரே மாநிலம் திமுக அரசை நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடுதான்" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details