சென்னை: தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தேர்வு எழுதும் மாணவர்களைச் சந்திக்கும் நோக்கில் நந்தனம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தேர்வு நடைபெறும் அறைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார். தொடர்ந்து, மாணவர்களின் வருகைப் பதிவு குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்து, மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் மதுவிலக்கு உள்ளதா? - விசிக திருமாவளவன் கேள்வி
தொடர்ந்து தேர்வறையினுள் சென்ற அமைச்சர் மாணவர்களுக்கான வினாத்தாள்களையும், விடை தாள்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். தேர்வெழுதும் மாணவர்களுக்கான குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளின் ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு ஆசிரியர்களிடம் வருகைப் பதிவு குறித்து கேட்டறிந்துள்ளார். மேலு, தேர்வெழுதும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியாக, தன்னம்பிக்கையுடன் தேர்வெழுதுமாறு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.