சென்னை:பழங்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட மேய்க்கால் (மேய்ச்சல்) புறம்போக்கு நிலம், விவசாயத்திற்கு தனியாரால் பயன்படுத்தப்படுகிறது என்று தொடரப்பட்ட வழக்கில், இனி ஒரு அடி கூட விவசாய நிலமாக மாற்றக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என நீதிமன்ற அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், சோலூர் பகுதியில் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட மேய்க்கால் நிலங்களை தனியார் விவசாய நிலங்களாக மாற்றி, ஆக்கிரமித்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (பிப்ரவரி 12) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், பழங்குடியினரின் உரிமைகளை தடுக்கவில்லை. அவர்களை கேடயமாக பயன்படுத்துகின்றனர். பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 390 ஏக்கர் நிலங்களில், பழங்குடியினர் அல்லாதவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர் என்றனர்.