தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நயினார் நாகேந்திரனின் ரூ.3.99 கோடி விவகாரம்: சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் வராது என அமலாக்கத்துறை பதில்! - nayinar nagendran case - NAYINAR NAGENDRAN CASE

Nayinar Nagendran Case: திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் இருந்து 3 கோடியே 99 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 22, 2024, 4:12 PM IST

சென்னை:தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் போது, திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் இருந்து 3 கோடியே 99 லட்சம் ரூபாயும், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரின் அலுவலகத்தில் இருந்து 28 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த பண பறிமுதல் தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திருநெல்வேலி தொகுதி சுயேட்சை வேட்பாளர் ராகவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம் கொண்டு சென்றது சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணம் பறிமுதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு, சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட குற்றமாக கருதமுடியாது எனவும், இருப்பினும், இது சம்பந்தமாக அமலாக்கத் துறையின் விளக்கத்தை பெற்று தெரிவிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, மனுவுக்கு ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு தள்ளுபடி - Manickam Tagore

ABOUT THE AUTHOR

...view details