சென்னை: வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்னிய மரங்களை அகற்ற வழிகாட்டுதல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அடுத்த 1 வருடத்தில் 3,000 ஏக்கரில் உள்ள மரங்கள் முழுவதுமாக அப்புறப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அரசின் அறிக்கைக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், மரங்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசாரணையின் போது கட்டுகட்டாக காகிதங்கள் மட்டுமே தாக்கல் செய்யப்படுகிறது. மரங்களை அகற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் தான் தேவை. வழிகாட்டுதல்கள் வகுப்பதால் எந்த முன்னேற்றமும் ஏற்படாது.
மரங்களை அகற்றுவதற்காக நிதியை திரட்ட அரசிடம் என்ன திட்டம் உள்ளது. அரசின் மற்ற திட்டங்களுக்கு எப்படி நிதி ஒதுக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏன் அலட்சியம் காட்டப்படுகிறது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் அரசுக்கு என்ன பிரச்னை உள்ளது.