தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவாகரத்து பெற வீடியோ கால் போதும் - அமெரிக்கா வாழ் தம்பதிக்கு நீதிமன்றம் அளித்த நிவாரணம்! - DIVORCE CASE

வளர்ச்சியடைந்த இன்றைய நிலையில் விவாகரத்து வழக்குகளில் சம்மந்தப்பட்ட தம்பதியை நேரில் ஆஜராக கட்டாயப்படுத்தாமல் காணொலி மூலம் விசாரித்து விவாகரத்து வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் -கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் -கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2024, 1:45 PM IST

Updated : Oct 23, 2024, 9:03 PM IST

சென்னை:சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2016ம் ஆண்டு சென்னை சேத்துப்பட்டில் இந்து திருமண முறைப்படி எனக்கு திருமணம் நடைபெற்றது. பெரியமேடு பதிவுத்துறையில் அலுவவலகத்தில் திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பின் நானும் எனது கணவரும் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் வசித்து வந்தோம்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விடுவது என முடிவு செய்து கடந்த 2021ம் ஆண்டு முதல் தனித்தனியாக வசித்து வந்தோம். தொடர்ந்து, ஜீவனாம்சம் கேட்க கூடாது, சொத்துக்கள் இருந்தால் உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் விவாகரத்து பெற முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். விசா பிரச்சனை காரணமாக, வழக்கு விசாரணைக்காக எனது கணவர் இந்தியா வர முடியாததால் அவரின் பவர் ஏஜெண்டாக அவரது தந்தை மனு தாக்கல் செய்தார்.

கடந்த 2023ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட விவாகரத்து வழக்கு நவம்பர் 15 வரை நிலுவையில் இருந்தது. நவம்பர் மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எனது கணவர் விசா பிரச்சனை காரணமாக நேரில் ஆஜராகததால் வழக்கு மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் வேலை காரணமாக நான் அமெரிக்கா செல்வதற்கு முன் எனது தாயை பவர் ஏஜெண்டாக ஏற்க வேண்டும். வழக்கு விசாரணைக்கு காணொலியில் ஆஜராக அனுமதிக்க வேண்டும். நீதிமன்றத்தின் சார்பில் வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்தேன். ஆனால், எனது கணவரும் இதே கோரிக்கையுடன் மனு செய்திருப்பதால் என்னுடைய மனுவை நீதிமன்றம் ஏற்கவில்லை.

அமெரிக்க தூதரகத்தில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக ஆஜராக குடும்பநல நீதிமன்ற அறிவுறுத்தியது. ஆனால், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் 12 1/2 மணி நேரம் மாறுபடுகிறது. அதனால் காலை 10 மணிக்கு விசாரணையை தொடங்க கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர், நாங்கள் இருவரும் காணொலி வாயிலாக ஆஜரானபோது அமெரிக்க தூதரகத்தில் இல்லாததால் வாதங்களை பதிவு செய்ய முடியாது என குடும்ப நல நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டதை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது' என்று அந்தப் பெண் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி நிர்மல் குமார் (Credits - ETV Bharat Tamilnadu)

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார்,'குற்ற வழக்குகளில் தான் சம்பந்தப்பட்டவர்களை நேரில் ஆஜராவது கட்டாயம் என கூற முடியும். பிற வழக்குகளில், குறிப்பாக, விவாகரத்து வழக்குகளில் காணொலிக் காட்சி மூலம் ஆஜராக வாய்ப்பளிக்க வேண்டும்.

விவாகரத்து வழக்கு தொடர்ந்த தம்பதிகள் நேரில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே இருவர் தொடர்பான ஆதாரங்களும், உத்திரவாதங்களும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், இருவரும் அமெரிக்காவில் பணியில் இருப்பதால் ஒவ்வொரு முறை விசாரணை நடைபெறும் போதும் நேரில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என கூற முடியாது. இன்றைய நிலையில் உலகின் எந்த மூலையில் இருப்பவருக்கும் நீதி கிடைக்கும வகையில் காணொலிக்காட்சி விசாரணை விரிவடைந்துள்ளது. அதனால், காணொலிக்காட்சி மூலம் விசாரணை நடத்துவதை நீதிமன்றம் உறுதிபடுத்த வேண்டும்.

விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் அவர்கள் நேரில் ஆஜராவதால் எந்த பயனும் இல்லை. இனிமேல், விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யும்போது மட்டும் சம்மந்தப்பட்ட இருவரும் நேரில் ஆஜரானால் போதுமானது. காணொலியில் ஆஜராகுபவர்கள் தங்களுக்கான அடையாளங்களுடன் எங்கிருந்து ஆஜராகிறார்கள் என தெரிவித்தால்போதும். அனைத்தும் சரியாக இருப்பதாக கருதினால் விவாகரத்து வழங்கலாம்' என்று உத்தரவிட்டார்.

Last Updated : Oct 23, 2024, 9:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details