தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீமானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு; விரைவாக விசாரித்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! - MADRAS HIGH COURT

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras High Court
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சீமான் கோப்புப் படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2024, 10:36 PM IST

சென்னை: கடந்த 2010ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், இலங்கை ராணுவத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் இரு சமூகத்தினரிடையே மோதலை உருவாக்கும் வகையிலும் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் கடந்த 2018ஆம் ஆண்டு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கடந்த 2021ஆம் ஆண்டு சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையும் படிங்க:கோவையில் யானை வழித்தடத்தில் மண் எடுப்பு - அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு!

இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் ஜோதிராமன் அமர்வு முன்பு இன்று (நவ.28) விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்குரைஞர் ராஜ்குமார், "இந்த வழக்கில் சாட்சி விசாரணை தொடங்கி, இதுவரையில் 13 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. எனவே, வழக்கை ரத்து செய்யக் கூடாது" என வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி சீமான் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் எஸ்.சங்கர், சாட்சிகள் விசாரணை தொடங்கி விட்டதால் மனுவை திரும்ப பெறுவதாக தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுவை திரும்ப பெற அனுமதித்தனர். அதே வேளையில், வழக்கு எவ்வளவு விரைவாக விசாரித்து முடிக்க முடியுமோ? அவ்வளவு விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details