தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை சட்ட விரோதச் செங்கல் சூளைகள் குறித்து நேரில் ஆய்வு செய்வதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவிப்பு..

Brick factory violation spot judges inspections: கோவை மாவட்டம், தடாகம் பள்ளத்தாக்கில் சட்ட விரோதமாகச் செங்கல் சூளைகள் இயங்கி வருகிறதா? என்பது குறித்து நேரில் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

mhc-brick-factory-violation-spot-judges-want-to-inspections
கோவை சட்ட விரோதச் செங்கல் சூளைகள் குறித்து நேரில் ஆய்வு செய்வதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவிப்பு..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 10:08 PM IST

சென்னை:கோயம்புத்தூர் மாவட்டம், தடாகம் பள்ளத்தாக்கில் சட்ட விரோதமாகச் செங்கல் சூளைகள் இயங்கி வருகிறதா? என்பது குறித்து நேரில் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

யானைகள் வழித்தடம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தடாகம் பள்ளத்தாக்கில் சட்டவிரோதமாக இயங்கி வந்ததால் மூட உத்தரவிடப்பட்ட 14 செங்கற் சூளைகள் தற்போது பேரூர், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு மாற்றப்பட்டு அங்குச் செயல்படுவதாகக் கூறினர்.

இவற்றில் மின் இணைப்பு இல்லாத சூளைகள் ஜெனரேட்டர் மூலம் இயங்குவதாகத் தெரிவித்தனர். தடாகம் பள்ளத்தாக்கில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வரும் சூளைகளை ட்ரோன் மூலம் கண்காணிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, இது தொடர்பாகத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்த அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், அதன் பின்னர் தாங்கள் விரைவில் நேரில் சென்று ஆய்வு செய்வது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் குறிப்பிட்டனர். மேலும், விசாரணையை மார்ச் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:கடலூர் எம்பி டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் மீதான கொலை வழக்கு; விசாரணைக்கு மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கி உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details